தமிழ் நாட்டில் பிரத்தியேகமாக பிஎஸ்என்எல் சிறப்புச் சலுகைகள்.!

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்கும் நோக்கில் பிஎஸ்என்எல் பயனர்களை அதிகரிக்கத் தமிழகத்தில் சிறப்புச் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான மூன்றே மாதங்களில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் நேரடி போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுகச் சலுகையில் அனைத்துச் சேவைகளையும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கி தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கப் பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களைத் தொடர்ந்து மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன் படி தமிழகத்தில் பிஎஸ்என்எல் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெகா மேளா

புதிய திட்டங்களை வழங்கத் தமிழக வட்டாரங்களின் செகண்டரி ஸ்விட்சிங் ஏரியாக்களில் சிறப்பு மெகா மேளா ஒன்றை பிஎஸ்என்எல் நடத்த இருக்கிறது. இந்தச் சிறப்பு மேளா புதன் கிழமை (16.11.2016) அன்று நடைபெற இருக்கிறது.

மேம்பாடு

இந்தச் சிறப்பு மேளா மூலம் ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவையினை வழங்க வழி செய்யும் எனப் பிஎஸ்என்எல் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்வரும் சலுகைகள் சிறப்பு மேளாவில் கிடைக்கும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எல்எல் 49 (LL 49)

மாதம் ஒன்றிற்கு ரூ.49/- என்ற கட்டணம் செலுத்த வேண்டும். ரீசார்ஜ் செய்த முதல் ஆறு மாதங்களுக்கு இந்தச் சலுகைகள் வேலை செய்யும், பின் சாதாரணக் கட்டணங்கள் பொருந்தும். இந்தச் சேவையில் அழைப்புக் கட்டணங்கள் மீட்டர்டு கால் யுனிட் (அதாவது மூன்று நிமிடம்) ஒன்றிற்கு ரூ.1/- ஆகும்.

தள்ளுபடி

எல்எல் 49 திட்டத்தில் இன்ஸ்டலேஷன் கட்டணங்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் காலர் ஐடி வெரிஃபிகேஷன் செய்ய ரூ.600/- வசூலிக்கப்படுகின்றது. மேலும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை அன்-லிமிட்டெட் இலவச கால், ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுக்க அனைத்து நெட்வர்க்களுக்கும் இலவச கால் வழங்கப்படுகின்றது.

அன்-லிமிட்டெட் பிரட்பேண்ட்

ஒவ்வொரு மாதமும் ரூ.249/- செலுத்தினால் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் திட்டத்தைப் பெற முடியும். இதுவும் முதல் ஆறு மாதங்களுக்குப் பொருந்தும். இந்தத் திட்டத்தில் டவுன்லோடு வேகம் 1 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி என்ற வேகத்திலும், அதன் பின் நொடிக்கு 1 எம்பி என்ற வேகத்திலும் கிடைக்கும். இதோடு இரவு நேரங்களில் இலவச அழைப்பு, அதாவது இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுக்க அனைத்து நெட்வர்க்களுக்கும் இலவச கால் வழங்கப்படுகின்றது.

பிபிஜி காம்போ யுஎல்டி 1199 (BBG Combo ULD 1199)

மாதம் ஒன்றிற்கு ரூ.1,199/- செலுத்தும் போது டவுன்லோடு வேகம் நொடிக்கு 2 எம்பியாகவும், கூடுதலாக அன்லிமிட்டெட் 24 மணி நேர இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த அழைப்புகள் எல்லா நெட்வர்க்களுக்கும் பொருந்தும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
BSNL Tamil Nadu circle offers special plans in mega mela
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்