அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 300 எம்பி பிஎஸ்என்எல் டேட்டா, எவ்வளவு தெரியுமா.?

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ ஐயர் ஆபருடன் போட்டியிடும் முனைப்பில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவிற்கு பின்னர் மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி முனைப்பில் பல காம்போ தொகுப்புகள், இலவச சலுகைகள், கூடுதல் நன்மைகள் முதலியனவைகளை அவரவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளன.

அதன் ஒரு பகுதியாக இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. அந்த திட்டம் மூலம் சந்தாதாரர்கள் எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம் மற்றும் அதே திட்டத்தின் கீழ் கூடுதலாக குறிப்பிட்ட அளவிலான தரவையும் அனுபவிக்க முடியும். இந்த பிஎஸ்என்எல் திட்டமானது ஆர்காம் நிறுவனத்தின் ரூ.149/- பேக்கிற்கு சமமான ஒரு திட்டமாகும். பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய திட்டம் சார்ந்த மேலும் விவரங்கள் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விலை

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் வெறும் ரூ.149/- க்கு இந்த பேக்கை அனுபவிக்க முடியும். ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த அளிக்கும் நன்மைகளை பெறும் பொருட்டு நீங்கள் வரும் ஜனவரி 1, 2017 வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று முதல் தான் இத்திட்டம் அமலுக்கு இருக்க வாய்ப்பு உள்ளது.

வரம்பற்ற உள்ளூர், தேசிய அழைப்பு

வரவிருக்கும் ரூ.149/- திட்டத்தின் படி, பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் ஒரு குறைந்த விலை செலுத்தி எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர், அத்துடன் தேசிய அழைப்புகளை செய்து மகிழலாம். இந்த பிஎஸ்என்எல் திட்டமானது இலவசங்களை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ ;போன்ற நிறுவங்களுக்கு எதிராக போட்டியிட உதவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

300எம்பி

வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்புகளோடு சேர்ந்து ரூ.149/- பேக் ஆனது 300எம்பி அளவிலான தரவை பயனர்களுக்கு வழங்குகிறது. நிறைய டேட்டா தேவையில்லை என்ற பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

அதிக நன்மை

ஒரு விதத்தில், பிஎஸ்என்எல்-ன் ரூ.149/- திட்டமானது ரிலையன்ஸ் ஜியோ ரூ.149/- பேக்கை விட அதிக நன்மை கொண்டுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் திட்டம் ஒரு மாத காலம் செல்லுபடியாகும், ஜியோ பேக் ஆனது 28 நாட்கள் மட்டுமே செல்லுப்படியாகும்.

இரண்டாம் இடம்

இந்த ரூ.149 பேக் மூலம், ஜியோவிற்கு அடுத்தபடியாக வரம்பற்ற குரல் அழைப்புகளை மலிவான விலையில் வழங்குவதில் பிஎஸ்என்எல் தான் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மற்ற நிறுவனங்கள் உயர் மதிப்பு பொதிகளில் தான் பெரும்பாலும் கவனம் செலுத்துகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிபி249 பிராட்பேண்ட்

கடந்த செப்டம்பர் மாதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு சவால் விடும் நோக்கத்தில் அதன் பிபி249 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

டேட்டா மற்றும் ஸ்பீட் லிமிட் இல்லாத ஆபர் - பிஎஸ்என்எல் அதிரடி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
BSNL Rs. 149 Plan to Offer Unlimited Voice Calls, 300MB Data to Combat Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்