ஜியோவை விட மலிவான விலையில் பிஎஸ்என்எல்-ன் அதிரடி சலுகை.!

Written By:

ரிலையன்ஸ் ஜியோவிற்கு நிகரான கட்டண சலுகையை வழங்கும் முதல் நிறுவனமாக இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் திகழும் என்று உயர் அதிகாரி ஒருவர் கூறியுளளார். இதன் மூலம் நாட்டின் நெரிசலான மொபைல் தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு கட்டண சலுகை யுத்தம் உருவாகியுள்ளது.

வெறும் ரூ.29/-ல் 1ஜிபி ஏர்டெல் டேட்டா பெறுவது எப்படி..? எளிய வழிமுறைகள்..!

பிஎஸ்என்எல் நெட்வொர்க் ஆனது இலவச வாய்ஸ் கால்கள் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோவை பின்பற்றினாலும் கூட அதன் விலையானது ஜியாவை விட மலிவாக இருக்கும்படி திட்டங்களை வகுத்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

திறந்த திட்டம் :

அதாவது 4ஜி பயனாளிகளுக்கு மட்டுமே என்ற ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் போலின்றி, பிஎஸ்என்எல் திட்டமானது 2ஜி மற்றும் 3ஜி மொபைல் வாடிக்கையாளர்களையும் பெரும்பான்மையினராக கொண்டு திறந்த திட்டமாக இருக்கும்.

வாழ்நாள் முழுவதுலுமான இலவச குரல் :

"நாங்கள் மிக நெருக்கமாக ஜியோவின் சந்தையை கவனித்து வருகிறோம். உடன் நாங்கள் வரும் புதிய ஆண்டில் வழங்கும் புதிய திட்டங்களின் அறிமுக சலுகையில் வாழ்நாள் முழுவதுலுமான இலவச குரல் திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்று பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.2 அல்லது ரூ.4 :

உடன் நாங்கள் வழங்கும் திட்டங்கள் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண திட்டங்களை விட விலை குறைவாக இருக்க திட்டமிட்டுள்ளோம், அதாவது ரூ.2/- அல்லது ரூ.4/- என இருக்க முடியும்" என்றும் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

சந்தை ஊடுருவல் :

கேரளா, இமாசலப்பிரதேசம், ஹரியானா, ஒரிசா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட பல முக்கிய சந்தைகளில் பிஎஸ்என்எல் ஒரு வலுவான சந்தை ஊடுருவல் மற்றும் கணிசமான பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜனவரி மாதம் முதல் :

வரும் ஜனவரி மாதம் முதல் பூஜ்ய-குரல் கட்டண திட்டங்களை பிஎஸ்என்எல் அறிவிக்க, அந்த திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- என்ற நுழைவு விலையை விட குறைவாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பிராட்பேண்ட் :

பிராட்பேண்ட் இணைப்பு கொண்ட பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் வழங்கப்படும் என்று அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார். ஆக இலவச குரல் வசதியை ஒரு சந்தாதாரர் இல்லத்திற்கு வெளியேவும் பயன்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அழுத்தம் :

இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் ஆனது ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற ஆப்ரேட்டர்கள் மீது மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது, மற்றவர்கள் இதை பின்பற்ற நேரிடும், உடன் இது பிஎஸ்என்எல் நிறுவனதிற்கே கூட சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

ஏர்டெல், ஐடியா புதிய 4ஜி சலுகைகள் : முழு விபரம்.!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
BSNL plans free voice, cheaper package than Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்