பிஎஸ்என்எல் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்

Written By:

பிஎஸ்என்எல் லேன்ட்லைன் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை மே மாதம் முதல் அமல் படுத்த இருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் லேன்ட்லைன் நம்பர்களுக்கு இரவு நேரங்களில் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்

இந்த சேவையானது இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வியாபாரத்தை ஊக்குவிக்க முடியும் என்பதோடு ஊராட்சி மற்றும் நகர் புறம் என அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கின்றது.

பிஎஸ்என்எல் லேன்ட்லைன் சிறந்த வாய்ஸ் க்லாரிட்டி வழங்குகின்றது. இனி லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணற்ற அழைப்புகளை இந்தியா முழுவதிலும் அனைத்து நெட்வர்க்களுக்கும் மேற்கொள்ள முடியும், என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
BSNL has announced an unlimited free calling scheme for its landline users that will allow them to call any landline and mobile number across service providers in India from May 1.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்