பிஎஸ்என்எல் : வெறும் ரூ.99/-க்கு இலவச டேட்டா & அன்லிமிடெட் வாய்ஸ்.!

நேற்று (வெள்ளிக்கிழமை) பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச தேர்வு கொண்ட புதிய திட்டமொன்றை அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Written By:

சமீப காலமாக இந்தியாவின் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின், எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக மூலகாரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிற்கிறது. புதிய திட்டமாக இருப்பினும் சரி, புதிய சலுகையாக இருப்பினும் சரி அனைத்துமே ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போடும் முனைப்பில் தான் வெளியாகின்றன, உடன் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் வடிக்கையாளர்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவும் இப்புதிய சலுகைகள் பார்க்கப்படுகின்றன.

அப்படியாக நேற்றைய தொலைத்தொடர்பு உலகின் அதிரடி ஜாக்பாட் சலுகை - பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு தான். நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நநிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச தேர்வு கொண்ட புதிய திட்டமொன்றை அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

என்னென்ன நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 300எம்பி தரவு உட்பட பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல்-களுக்கான வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு திட்டமான ரூ.99/- பேக்கை அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விலை வேறுபாடு

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரூ.99/-க்கு கொல்கத்தா வட்டம் , மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அசாம், குஜ்ராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் பிற இடங்களில் ரோ. 119/-ல் இருந்து ரூ.149/- வரை என்று வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்போ பேக்

பிஎஸ்என்எல் பான்-இந்தியா அடிப்படையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் மேலும் ஒரு திட்டமான ரூ.339/- பேக்கையும் அறிமுகம் செய்துள்ளது. எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் புதிய எஸ்டிவி வழங்குகிறது.

வரம்பற்ற 3ஜி சேவை

பிஎஸ்என்எல் ஏற்கனவே ரூ.1099/-க்கு 30 நாள் செல்லுபடியாகும் அதன் வரம்பற்ற 3ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதும், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்படும் கட்டண சலுகைகள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு மலிவான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் மற்றும் ஐடியா

இந்த மாத தொடக்கத்தில், பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களும் ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் கட்டண யுத்தம் காரணமாக அதன் இலவச அழைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மொபைல் இண்டர்நெட் சலுகைகளை இரண்டு தொகுப்புகளுக்காக வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
BSNL Offers Free Data and Unlimited Voice Calling Starting at Rs. 99 per Month. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்