பழைய கட்டணம், இருமடங்கு பலன் : பிஎஸ்என்எல் புதிய திட்டம் அறிவிப்பு!

Written By:

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எனப் பண்டிகை காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் பிரீபெயிட் பயனர்களுக்கு இரட்டைச் சலுகை வழங்கப்படுகின்றது. இது குறித்த விரிவான தகவல்களை பார்ப்போமா..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இரட்டைச் சலுகை

பிஎஸ்என்எல் பிரீபெயிட் பயனர்களுக்கு இரட்டைப் பலன் தரும் நான்கு ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்கள் (Special Tariff Vouchers - STVs) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியா

நான்கு புதிய STVகள் இந்தியாவின் பண்டிகை காலத்தைச் சிறப்பிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'இவற்றின் வேலிடிட்டி சுமார் 365 நாட்கள் ஆகும். இத்துடன் அக்டோபர் 10 முதல் 31 வரை டபுள் டேட்டா சலுகையும் வழங்கப்படுகின்றது,' என பிஎஸ்என்எல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பு

புதிய திட்டத்தின் படி ரூ.1,498 செலுத்தும் போது 9 ஜிபிக்கு பதிலாக 18 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, ரூ.2,798 செலுத்தும் போது 18 ஜிபிக்கு பதில் 36 ஜிபி வழங்கப்படுகின்றது, ரூ.3,998 செலுத்தும் போது 30 ஜிபிக்கு பதில் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, ரூ.4,498 செலுத்தும் போது 40 ஜிபிக்கு பதில் 80 ஜிபி வரை வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ

ரிலையன்ல் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு நிறுவனங்களும் விலை குறைப்பு மற்றும் சேவை அதிகம் வழங்கும் திட்டங்களை தினம் தினம் அறிவித்து வருகின்றன. இம்முறை பண்டிகை கால சலுகையின் பெயரில் போட்டி மேலும் அதிகமாகியுள்ளது.

தகவல்

மலிவு விலை மற்றும் தரமான சேவைகளை அனைத்துப் பயனர்களுக்கும் வழங்குவதே பிஎஸ்என்எல் நோக்கமாக உள்ளது என அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
BSNL Offers '1 + 1 Free Data' For Prepaid Customers
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்