பிஎஸ்என்எல் : நான்-இன்டெர்நெட் பயனர்களுக்கு 1ஜிபி இலவச தரவு.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வளர்ச்சி திட்டமானது ஜியோவின் பிரதம உறுப்பினர் திட்ட அறிவிப்பிற்கு முன்தினம் அறிமுகமாகிறது.

Written By:

இந்திய தொலைத்தொடர்புத்துறையில் எந்தவொரு நிறுவனம் எந்தவொரு சலுகையை வழங்கினாலும் அதற்கு அடித்தள காரணமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திகழ்கிறது என்பது வெளிப்படை. '

ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராய் கடுமையான திட்டங்களை வகுக்கும் என்று யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.339/- ரீசார்ஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இப்போது அந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்றொரு நான்-இன்டெர்நெட் பயன்ரகளுக்கான 1ஜிபி அளவிலான இலவச டேட்டா திட்டமும் ஜியோவிற்கு எதிரான ஒரு சிறப்பான சலுகையாகவே தோன்றுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1ஜிபி அளவிலான இலவச டேட்டா

அரசு நடத்தும் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஸ்மார்ட்போன் இணைப்பு கொண்ட பயனர்களாக இருந்தும் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் தரவு சேவைகளை பயன்படுத்தாத பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்தியா நடவடிக்கை

இந்த பான் இந்தியா நடவடிக்கையானது டிஜிட்டல் இந்தியா ஊக்குவிப்புடன் ப்ரீபெய்ட் மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் இலக்காக அறிமுகமாகியுள்ளது.

இந்த வாய்ப்பின்கீழ்

இந்த பான் இந்தியா அடிப்படையிலான பிஎஸ்என்எல்-ன் ஜிஎஸ்எம் தரவு சேவைகளை பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 1 ஜிபி அளவிலான இலவச தரவு வழங்குகிறது. இந்த வாய்ப்பின்கீழ் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இணைய பயனர்கள் ஆர்வம் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஜியோவை எதிர்கொள்ளும் நோக்கத்தில்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வளர்ச்சி திட்டமானது ஜியோவின் பிரதம உறுப்பினர் திட்ட அறிவிப்பிற்கு முன்தினம் அறிமுகமாகிறது. இதுமட்டுமின்றி ஜியோவை எதிர்கொள்ளும் நோக்கத்தில் பிஎஸ்என்எல் ரூ.339/- திட்டத்தின் கீழ் வரம்பற்ற அழைப்புகளுடனான நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி தரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன நன்மை

இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இரண்டாவது முறையும் ஏமாறக்கூடாது என்பதால் எது சிறந்த சேவையை வழங்குகிறதுக்கே என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமா.? இதோ என்னென்ன நிறுவனம் என்னென்ன கட்டண திட்டங்களை கீழ் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை பற்றிய தொகுப்பு (இங்கே கிளிக் செய்யவும்)

மேலும் படிக்க

ஜியோ ப்ரைம் : கோபத்தை கிளப்பும் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
BSNL offering 1GB free data to non-Internet users. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்