ஜியோ போட்டி எதிரொலி, ஜனவரி முதல் இலவச வாய்ஸ் கால் வழங்கும் பிஎஸ்என்எல்.!

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ளப் புத்தம் புதிய திட்டங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்யப் பிஎஸ்என்எல் தயாராகி வருகின்றது.

Written By:

ஜியோவுடனான போட்டியில் புதிய சலுகைகளுடன் களத்தில் இறங்க பிஎஸ்என்எல் ஆயத்தமாகி விட்டது. வாய்ஸ் கால், குறுந்தகவல், இண்டர்நெட் என அனைத்துச் சேவைகளையும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கும் ஜியோவை எதிர்கொள்ள ஜனவரி முதல் இலவச வாய்ஸ் கால்களைப் பிஎஸ்என்எல் வழங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோவுடன் அனைத்தும் சீராக இருக்கும் பட்சத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படும் எனப் பிஎஸ்என்எல் நிர்வாகத் தலைவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வாய்ஸ் கால் சேவைகளை வழங்குவது குறித்த அறிவிப்பினை உறுதி செய்தார்.

ஜியோ ஏற்கனவே இலவச சேவைகளை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் வழங்க இருக்கும் புதிய சேவைகள் எவ்வாறு வேலை செய்யும் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இலவச வாய்ஸ் கால்ஸ்

ரிலையன்ஸ் ஜியோ முற்றிலும் 4ஜி சார்ந்த சேவையினை வழங்கி வருகின்றது. பிஎஸ்என்எல் பல்வேறு நகரங்களில் 4ஜி சேவைகளை அறிமுகச் செய்ய வேண்டும்.

வாய்ஸ் கால்களுக்கு ஜியோ வோல்ட்இ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது. பிஎஸ்என்எல் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

வோல்ட்இ

ஏற்கனவே குறிப்பிடத்தைப் போன்று ஜியோ வோல்ட்இ தொழில்நுட்பத்தை வைத்து வாய்ஸ் கால்களை வழங்குகின்றது. ஆனால் பிஎஸ்என்எல் சாதாரண முறையில் வாய்ஸ் கால்களை வழங்க வேண்டியிருக்கும்.

2ஜி மற்றும் 3ஜி

டேட்டா திட்டங்களுடன் வாய்ஸ் கால்களை வழங்கும் பட்சத்தில் 2ஜி மற்றும் 3ஜி பயனர்களுக்கும் வாய்ஸ் கால் சேவையினைப் பிஎஸ்என்எல் வழங்கும். தற்சமயம் இருக்கும் வழிமுறைகளில் வோல்ட்இ தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

பிராட்பேன்ட்

பெரும்பாலும் இலவச வாய்ஸ் கால் சேவையானது பிராட்பேன்ட் பயனர்களுக்கு அதிகம் பயனளிக்கும் எனப் பிஎஸ்என்எல் நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கட்டணம்

ஜியோவை விட அதிகப் போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்பதால் விலை மிகவும் குறைவானதாக இருக்கும். ரூ.2-4 வரை திட்டங்கள் துவங்கலாம் என்றும் இந்தச் சேவைகளைப் பிஎஸ்என்எல் ஜனவரி முதல் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
BSNL to Offer Free Voice Calls from January 2017
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்