ஜியோவை காலி செய்ய 4ஜி அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்.!!

ஜியோவுடனான 4ஜி போட்டி சூடு பிடித்திருக்கும் நிலையில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் பணிகளில் பிஎஸ்என்எல் இறங்கியிருக்கின்றது.

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விலை போகாமல் இருந்த 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தினை பயன்படுத்திக் கொள்ளப் பிஎஸ்என்எல் மத்திய டெலிகாம் அமைச்சகத்திற்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

நாடு முழுக்க 4ஜி சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 700 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் இல் 5 மெகாஹெர்ட்ஸ் பிளாக்கினை பயன்படுத்திக் கொள்ளப் பிஎஸ்என்எல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உறுதி

இது குறித்துக் கருத்து தெரிவித்த பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, '700 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் இல் 5 மெகாஹெர்ட்ஸ் பிளாக் பயன்படுத்துவது குறித்துப் பிஎஸ்என்எல் சார்பில் மத்திய டெலிகாம் அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது உண்மை தான்' எனத் தெரிவித்தார்.

விலை

இம்முறை அறிவிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் அறிமுக விலையாக ஒரு மெகாஹெர்ட்ஸ் ரூ.11,485 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மறுபரிசீலனை

இந்திய டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் 700 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் கட்டணங்களை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன. இந்த ஏலத்தில் கடுமையான விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் யாரும் வாங்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயன்பாடு

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க யாரும் வாங்க முன்வராத 700 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் வாங்க பிஎஸ்என்எல் தயாராக இருப்பதாக ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.  

சேவை

புதிதாக கிடைக்கும் 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மற்றும் எங்களிடம் இருக்கும் 2500 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் என இரண்டையும் இணைக்கும் போது சீரான 4ஜி சேவைகளை நாடு முழுவதும் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டேஷன்

700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மூலம் குறைந்தளவு பேஸ் ஸ்டேஷன்களைக் கொண்டு சிறப்பான சேவையை வழங்க முடியும் என ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இத்துடன் மூலை முடுக்குகளிலும் சிறப்பான சிக்னல் வழங்க 700 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வழி செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
BSNL Eyes Spectrum in 700MHz Band for 4G Services
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்