தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க..!?

Posted by:

"இந்த உலகமே நமக்கு எதிராக செயல்படுது"னு ஒரு நிமிஷம் தோணும். அது எந்த நிமிஷம் தெரியுமா.? காலையில் நாம் வைத்த அலாரம் அடித்து, நம்மையே எழுப்பும் பாருங்கள் - அது தான்..! சரியான நேரத்துக்கு தூக்கம் வருதோ இல்லயோ, ஆனால் வச்ச நேரத்துக்கு 'கரக்ட்டாக' அலாரம் அடிக்கும்..!

சரியா மாட்டிக்கிட்டோம், இனி நிம்மதியா தூங்கவே முடியாது..!

அப்படியே அலாரக்கடிகாரத்தை தூக்கி அடிச்சு உடைச்சிடலாமானு கூட தோணும்..! என்ன செய்வது தொழில்நுட்பம் இப்படி 'செட்' செய்தே அலாரக் கடிகாரங்களை வடிவமைத்து விட்டது. அந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக தான், நமக்கு பல வகையான சிறப்பான அலாரக் கடிகாரங்களை வழங்கி கொண்டே இருக்கிறது தொழில்நுட்பம்..!

அப்படியான ஒரு சிறப்பான கடிகாரத்தை தான் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இதுதான் ஃபிளிப், ஒரு ஸ்மார்ட் கடிகாரம்..!

ஆன் மற்றும் ஆஃப் என்று இரண்டு பக்கம் கொண்டது..!

அலாரம் 'செட்' செய்து விட்டு 'ஆன்' இருக்கும் பக்கம் திருப்பி வைத்தால் போதும் டைம் 'செட்' ஆகிவிடும்..!

அலாரம் அடிக்கும்போது 'ஆஃப்' இருக்கும் பக்கத்தை பார்த்து திருப்பினால் போது நின்றுவிடும்..!

அல்லது ஒரு தட்டு தட்டினால் போதும் நின்று விடும்..!

'டச்' சென்சார் கொண்டது. தேவைக்கு ஏற்ப தொட்டால், ஸ்னூஸ் ஆகிக் கொள்ளும் மற்றும் லைட் ஆன் ஆகும்..!

இது இரண்டு பக்கமும் நேரம் காட்டும்..!

இதில் பிரகாசமான எல்சிடி கிளாக் டிஸ்ப்ளே உள்ளது..!

எளிமையான எலக்ட்ரோலுமினஸ் டயல் வசதி கொண்டது, இதன் மூலம் ஈசியாக அலாரம் செட் செய்யலாம்.!

இதன் எடை வெறும் 100 கிராம் மட்டுமே..!

இதனுள் 2 x AAA பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது..!

இது ரப்பர் ஏபிஎஸ் என்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது..!

இது லெக்ஸான் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பாகும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here about the brilliant alarm clock design ever - Flip, Double Sided Alarm Clock.
Please Wait while comments are loading...

Social Counting