க்ரூப்ல டூப்பு - முடிஞ்சா கண்டுபிடிங்க.!!

Written By:

ஆப்பிள் ஐபோன் வாங்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. உலகில் எங்கு சென்றாலும் அனைவராலும் விரும்பப்படும் கருவிகளில் ஆப்பிள் ஐபோன்களுக்கு சிறப்பு இடம் நிச்சயம் இருக்க தான் செய்கின்றது. இத்தனை பெருமையுடைய ஐபோன்களை பயன்படுத்த பலருக்கும் ஆசை இருந்தும் வாங்க முடியாமல் போவதற்கு காரணம் அவைகளின் விலை தான் முக்கிய காரணம்.

இதை காரணமாக வைத்து கொண்டு தான் போலி தயாரிப்புகள் வெளியாகின்றன. அதுவும் போலி ஐபோன்களை தயாரிப்பதில் சீனர்களுக்கு அதிக விருப்பம் இருக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் சீனர்கள் அப்பட்டமாக காப்பியடித்த சில கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எக்ஸ்போன் 6

ஐபோன் 6 கருவியின் அச்சு தான் எக்ஸ்போன் 6. ஆப்பிள் நிறுவனத்தை அப்பட்டமாக தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஆப்பிள் கருவிக்கு வழங்கப்படும் உபகரணங்களே வழங்கப்படுகின்றன.

சி-002

ஐபோன் 4 கருவியை அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட இந்த கருவி இந்திய மதிப்பில் ரூ.15,538 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஐபோன் நானோ

ஐபாட் நானோ போன்று காட்சியளிக்கும் போன் தான் ஐபோன் நானோ என அழைக்கப்படுகின்றது.

சிஈசிடி பி168

ஐபோன் 3எஸ் போன்றே காட்சியளிக்கும் இந்த கருவி மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூற வேண்டும்.

கூபோன் ஐ6 மற்றும் ஐ6 ப்ளஸ்

ஐபோன் 6 கருவியின் மற்றும் ஓர் காப்பி தான் இந்த கூபோன் 6. ஐபோன் 6 வெளியாகும் முன்பே இந்த கருவி வெளியானது குறிப்பிடத்தக்கது.

டாகெல் பிக் கோலா 3

காப்பியடிக்கப்பட்டது என கூறுவதை விட கொடுக்கும் விலைக்கு இந்த கருவி தரமானது என்றே கூற வேண்டும். இந்த கருவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.15,786 ஆகும்.

டெக்சட் ஐஎக்ஸ்-மேக்சி

இந்த கருவியை தயாரித்தது ரஷ்ய நிறுவனம் என்பதோடு இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11,368 ஆகும்.

சோபோன் ஐ6

இதுவும் ஐபோன் 6 போன்றே காட்சியளிக்கின்றது என்பதோடு இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.9,100 ஆகும்.

பிரபலம்

இந்த கருவிகள் ஆப்பிள் ஐபோன் போன்று காட்சியளிக்குமே தவிற இதை கொண்டு வேறு எதுவும் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Boldest and Shameless iPhone Clones Ever. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்