3டி பிரிண்ட்டிங் மூலம் தன் குழந்தையை 'பார்த்த' பார்வையற்ற கர்பிணி..!

|

இறைவன் வேண்டுமானால் மனித படைப்புகளில் குறைகள் வைத்திருக்கலாம். ஆனால் மனிதன் எதிலும் குறை வைப்பதாய் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் இருக்கும்வரை குறை என்ற வார்த்தைக்கு பலம் குறைவே..!

3டி பிரிண்ட்டிங் மூலம் தன் குழந்தையை 'பார்த்த' பார்வையற்ற கர்பிணி..!

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பமானது, பார்வையற்றோர்களுக்கு தம்மை சுற்றி உள்ள உலகத்தை தொடு உணர்வால் 'பார்க்க' பல வகையில் உதவிக்கொண்டு தான் இருக்கின்றது. அவ்வாறாக தொடு உணர்ச்சியின் மூலம் அவர்களின் கற்பனைக் கண்களால் கண்ட காட்சிகளில், தலை சிறந்த காட்சியை கண்டது பார்வையற்ற 30 வயது கர்பிணி பெண்ணான - டடீயானா..!

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

ஒவ்வொரு கர்பிணி பெண்ணும் கருவில் இருக்கும் தன் குழந்தையை முதன்முதலாக பார்ப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போதுதான், அது தாய்மையின் ஒரு பரவச உணர்வுகளில் ஒன்று எனலாம். டடீயானாவிற்கு பார்வை இல்லாத காரணத்தால், அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது மொபைல் 3டி பிரிண்ட்டிங் ஸ்டேஷன் மூலம் டடீயானாவின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தலை மற்றும் கைகளின் 3டி பிரிண்ட்டிங் உருவ பொம்மையை உருவாக்கி கொடுத்து, தன் பிறக்காத குழந்தையை டடீயானா தொட்டு உணர வழி வகுத்து தந்து, அவரை பரவசமடைய செய்தது..!

3டி பிரிண்ட்டிங் மூலம் தன் குழந்தையை 'பார்த்த' பார்வையற்ற கர்பிணி..!

பிரசவிப்பதற்க்கு முன்பே தன் குழந்தையை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ள டடீயானா, தன் குழந்தைக்கு முரீலோ என்று பெயர் சூட்ட காத்திருக்கிறார்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Expecting mother Tatiana Guerra and the 3D-printed bust that allowed her to see her unborn child.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X