ஆப்பிள் பிரச்சனைகள் விரிவான தகவல்கள்..!!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் இன்று உலக பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சி பாதையில் பல்வேறு பெரிய பிரச்சனைகளும் பஞ்சாயத்துகளும் அடங்கியுள்ளது.

அறிமுகமானது ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்..!!

ஆப்பிள் எனும் வெள்ளை நிறுவனத்தின் யாரும் அறிந்திராத கருப்பு பக்கங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்...

அறிமுகமான ஆப்பிள் கருவிகள்..!!

ஐபோன்

ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் சுமார் $599 விலைக்கு வெளியானது, பின்னர் மூன்றே மாதங்களில் சுமார் $200 குறைக்கப்பட்டு $399 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிருப்தி

அதிருப்தி

இதனால் முன்பே $599 கொடுத்து ஐபோனை வாங்கியவர்கள் அதிருப்தி தெரிவித்தனர், இதையடுத்து அவர்களுக்கு $100 ஆப்பிள் ஸ்டோர் க்ரெடிட் வழங்கப்பட்டது.

ப்ளாஷ்

ப்ளாஷ்

அடோப் ப்ளாஷ் தொழில்நுட்பம் இமையதளம், விளையாட்டு, பாடல்கள் மற்றும் வீடியோ என அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த காலத்திலேயே ஆப்பிள் நிறுவனம் ப்ளாஷ் தொழில்நுட்பத்தில் அதிக பிரச்சனைகள் இருப்பதாக கூறி ப்ளாஷ் வசதியினை ஐபோன்களில் வழங்கவில்லை.

2012

2012

ப்ளாஷ் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிலை பின்னர் அனைவரும் அறிந்து கொண்டதோடு அடோப் நிறுவனம் மொபைல்களில் ப்ளாஷ் டெவலப்மென்ட் பணியை 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.

வரைபடம்

வரைபடம்

2012 ஆம் ஆண்டு ஐஓஎஸ் 6 இயங்குதளத்தில் வழங்கப்பட்ட வரைபடங்கள் தவறான வழிகளை காண்பித்தது. இதனால் ஆப்பிள் பயனாளிகள் அதிருப்திக்கு உள்ளானார்கள்.

மன்னிப்பு

மன்னிப்பு

ஆப்பிள் வரைபடம் பிரச்சனைக்காக ஆப்பிள் நிறுவனம் பொது மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்டெனா கேட்

ஆன்டெனா கேட்

2010 ஆம் ஆண்டு சில ஐபோன் வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோன் சில கோணங்களில் இருக்கும் போது சரியாக சிக்னள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர், முதலில் இதை நிராகரித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பின் பிரச்சனை இருப்பதாக ஒப்பு கொண்டார்.

ஐஓஎஸ் 8.0.1

ஐஓஎஸ் 8.0.1

2014 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை அப்டேட் செய்து ஐஓஎஸ் 8.0.1 இயங்குதளத்தை வெளியிட்டது, இதை இன்ஸ்டால் செய்த வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.

சிக்னல்

சிக்னல்

ஐஓஎஸ் 8.0.1 அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் சிக்னல் பிரச்சனை மற்றும் டச் ஐடி கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சேவைகளில் அதிக பிரச்சனைகளை சந்தித்தனர். எனினும் ஆப்பிள் நிறுவனம் இந்த அப்டேட்டினை விரைவாக இணையத்தில் இருந்து எடுத்து பின் ஐஓஎஸ் 8.0.2 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஐபோன்4

ஐபோன்4

வெளியீட்டுக்கு முன்பே ஐபோன் ஒன்றை கிஸ்மோடோ இணையதளத்தை சேர்ந்த ஊழியர் விலைக்கு வாங்கினார். இதையடுத்து ஆப்பிள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கருவியை மீட்டனர்.

குற்றம்

குற்றம்

வெளியீட்டு முன் கருவியை திருட்டுத்தனமாக வாங்கியதோடு அதன் தகவல்களையும் வெளியிட்ட குற்றத்திற்காக கிஸ்மோடோ இணையதள நிர்வாகிகளின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சமாதானம்

சமாதானம்

கிஸ்மோடோ ஊழியர்கள் சிறிய தொகையை அபராதமாக செலுத்த ஒப்பு கொண்ட பின் 2011 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Biggest Controversies in iPhone History. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X