கூகுள் ஐ / ஒ 2016 : அதிரடி அறிவிப்புகள்.!!

By Meganathan
|

ஐ / ஒ என்பது தொழில்நுட்ப திருவிழா அல்லது சேவை அறிமுக விழா என குறிப்பிடலாம். ஒவ்வொரு ஆண்டும் உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது கருவிகள், மற்றும் இதர சேவைகளை அறிமுகம் செய்ய ஐ / ஒ என்ற நிகழ்வை நடத்துவது வாடிக்கையான விஷயம் ஆகும்.

அந்த வகையில் கூகுள் ஐ / ஒ இம்மாதம் 18 ஆம் தேதி துவங்கியது. இன்றோடு நிறைவடைய இருக்கும் கூகுள் ஐ / ஒ 2016 இல் அந்நிறுவனம் அறிவித்திருக்கும் சில அதிரடி திட்டங்கள் மற்றும் சேவைகளை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

1

1

இது ஒரு குறுந்தகவல் செயலி ஆகும். மொபைல் நம்பர் கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் அல்லோ வழங்குகின்றது.

2

2

இதோடு புகைப்படம் வரைதல், குறுந்தகவல்களின் அளவை கட்டுப்படுத்தும் அம்சம் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

3

3

மேலும் அனைத்து குறுந்தகவல்களின் பாதுகாப்பு கருதி முழுமையான என்க்ரிப்ட் மற்றும் இன்காஃநிட்டோ மோடு போன்றவைகளும் இதில் இருக்கின்றது.

4

4

அல்லோ போன்றே இதுவும் குறுந்தகவல் செயலி ஆகும். இது ஒரு வீடியோ சாட் செய்யும் செயலி என்பதோடு ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் போன்ற செயலியாகும். இது முழுக்க முழுக்க வீடியோ அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

5

5

டுயோ செயலி பயன்படுத்த மிகவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியை திறந்தவுடன் உங்களது செல்பீ கேமரா மூலம் உங்களது வீடியோவினை பார்க்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் நாக் நாக் அம்சமானது நீங்கள் அழைப்பை மேற்கொள்வருக்கு வீடியோ ப்ரீவியூ ஒன்றை காண்பிக்கின்றது.

6

6

இந்த வீடியோ சாட் செயலி உங்களது மொபைல் நம்பர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7

7

கூகுள் ஹோம் என்பது சிறிய ரக ஸ்பீக்கர்கள் ஆகும். நாள் முழுக்க மைக்ரோபோன் மூலம் உரையாடல்களை கேட்கும் இந்த கருவி எக்கோ போன்று கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் திறன் கொண்டதாகும்.

8

8

இந்த கருவியானது கூகுள் அசிஸ்டண்ட் உதவியோடு கேள்விகளை புரிந்து கொள்கின்றது. இதோடு வெப்பநிலையை கணக்கிடும் நெஸ்ட் பயன்படுத்தி வீட்டு விளக்கு நிறங்களை மாற்றும் திறன் கொண்டதாகும்.

9

9

இது கிட்டத்தட்ட சாட் ஆப் போன்றதாகும். இதனினை கூகுள் ஹோம் மற்றும் அல்லோ போன்ற சேவைகளுடன் இணைக்க முடியும். மேலும் இச்செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் பதில்களை கூகுள் படித்து அதற்கேற்ப பதில் அளிக்க உதவுகின்றது.

10

10

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்திற்கு பின் கூகுள் நிறுவனம் பெயரிடப்படாத கூகுள் என் இயங்குதளத்தின் டெவலப்பர் ப்ரிவியூவினை அறிமுகம் செய்துள்ளது.

11

11

இதில் க்விக் செட்டிங்ஸ் பட்டன், ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங், புதிய எமோஜி போன்ற அம்சங்களை வழங்கியிருக்கின்றது. இதோடு நோட்டிபிகேஷன்களின் எண்ணிக்கை தீர்மாணிக்கும் வசதி, புதிய பிக்சர் இன் பிக்சர் மோடு போன்ற அம்சங்களும் அடங்கும்.

12

12

2014 ஆம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு வியர் முதல் பதிப்பை விட அதிக மாற்றங்கள் இல்லை என்றாலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வித்தியாச அனுபவம் பெற முடியும்.

13

13

இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலும் தாணியங்கி முறையில் செயல்படும் என்றும் இவை ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா இணைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14

14

ஓட்டுனர்களுக்கு அதிக பயன் தரும் வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள வேஸ் மற்றும் டிராஃபிக் டிராக்கிங் ஆப் மூலம் ஓட்டுனர்கள் கன நேரத்தில் வாகன நெரிசல் மற்றும் விபத்து குறித்த தகவல்களை பெற முடியும்.

15

15

புதிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மகிழுந்துகளுடன் வை-பை மற்றும் யுஎஸ்பி கனெக்ஷன் மூலம் இணைந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

16

16

புதிய விர்ச்சுவல் ரியால்டி தளமானது ஆண்ட்ராய்டு என் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூகுள் கார்டு போர்டை விட சிறப்பாக இருக்கும் என்றும் இது ஆண்ட்ராய்டு என் மென்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக சிறப்பான பயன் தரும்.

17

17

இதன் ஹோம் ஸ்கிரீன் கியர் விர்ச்சுவல் ரியால்டி ஹோம் ஸ்கிரீன் போன்றே காட்சியளிக்கின்றது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளுக்கு விர்ச்சுவல் ரியால்டி வெர்ஷன்களை வழங்கியுள்ளது. இதன் பெரிய கட்டுப்பாடு இவை பிரத்யேக திரை மற்றும் சென்சார்கள் கொண்ட கருவிகளில் மட்டும் வேலை செய்வது மட்டுமே.

18

18

ஸ்மார்ட்போன் மூலம் சக்தியூட்டப்பட்ட விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆகுளஸ் ரிஃப்ட் போன்றே சிறிய அளவில் காட்சியளிக்கின்றது. கூகுள் நிறுவனம் விர்ச்சுவல் ரியால்டி பிரிவில் அதிக கவனம் செலுத்துவதாகவே தெரிகின்றது.

19

19

ஆண்ட்ராய்டு இன்ஸ்டண்ட் ஆப்ஸ் என்பது கருவியில் ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும் லோடு செய்ய வழி செய்யும். மேலு்ம டெவலப்பர்கள் தங்களது செயலிகளை மேம்படுத்த 24 மணி நேரம் கூட ஆகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20

20

அல்லோ மற்றும் டுயோ போன்ற செயலிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும், கூகுள் ப்ளே ஸ்டோர் இதற்கான முன்பதிவுகளை ஏற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தததும் ஆப்ஸ் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டதும் நோட்டிபிகேஷன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Biggest Announcements at Google I/O 2016. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X