வாட்ஸ்ஆப் வீடியோ கால், நம்பாதீங்க பாஸ்.!

வாட்ஸ்ஆப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சம் சமீபத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதே அம்சம் அனைவரையும் அச்சுறுத்தவும் செய்திருக்கிறது.

Written By:

வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன் வீடியோ காலிங் ஆப்ஷனை அனைவருக்கும் வழங்கியது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட் வெளியிடப்பட்டு விட்டது.

இந்த ஆப்ஷன் அறிவிக்கப்பட்ட சில நேரத்தில் ஹேக்கர்கள் இந்த அம்சத்தினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் செய்ய இந்த லின் கிளிக் செய்யுங்கள் என்ற குறுந்தகவல் வாட்ஸ்ஆப் முழுக்கத் தீயாய் பரவி வருகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கிளிக்

இவ்வாறு பரவி வரும் குறுந்தகவல் உங்களை ஏமாற்றி உங்களின் தகவல்களைத் திருடும் முயற்சி ஆகும். எனவே யாரும் இந்த லின்க்'ஐ கிளிக் செய்ய வேண்டாம். இது போல் வலம் வரும் குறுந்தகவலில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்ய வரவேற்கிறோம், இந்த அழைப்பிதழ் கொண்டவர்கள் மட்டுமே வீடியோ கால் செய்ய முடியும் என்பன போன்ற தகவல் இந்தக் குறுந்தகவல் கொண்டுள்ளது.

இணையத்தளம்

குறிப்பிட்ட இணையத்தளம் பார்த்த உண்மையானது போன்ற காட்சியளிக்கிறது. இந்தத் தளத்தில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி போன்ற இயங்குதளங்களில் வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட்

ஹேக்கர்கள் ஒருபடி மேலே சென்று போலி ஸ்கிரீன்ஷாட்களையும் பதிவு செய்திருக்கின்றனர். இதுவும் பார்க்க உண்மையானதைப் போன்றே காட்சியளிக்கிறது. இதோடு வீடியோ கால் செய்யும் வீடியோ ஒன்றும் இந்தத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கால் ஆப்ஷனினை க்ரூப்களிலும் அதிகபட்சம் ஐந்து பேர் வரை வீடியோ கால் செய்ய முடியும் என்றும் இந்தப் போலி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷேரிங்

வீடியோ காலிங் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யும் போது ‘video calls activating service', ‘receiving answer' மற்றும் ‘receiving verification link' போன்ற ஆப்ஷன்களைத் தொடர்ந்து இறுதியாக இந்த லின்க்'னை ஆக்டிவாக இருக்கும் நான்கு வாட்ஸ்ஆப் க்ரூப்களில் ஷேர் செய்யக் கோருகின்றது.

ஹேக்கிங்

தெரியாமல் இந்த லின்க்'ஐ கிளிக் செய்தோரின் தகவல்கள் உளவு பார்க்கப்படலாம், அல்லது திருடப்படும் அபாயம் அதிகமே. உண்மையில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் பெற வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்தால் மட்டுமே போதுமானது. வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்ததும் ஏதேனும் காண்டாக்டினை தேர்வு செய்து வாய்ஸ்கால் பட்டனை கிளிக் செய்ய வேண்டும், இனி வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் என இரு ஆப்ஷன்கள் வரும். வீடியோ கால் பட்டனை கிளிக் செய்து வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

சாதாரணம்

வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் இதுபோன்ற போலி எஸ்எம்எஸ்கள் பரவுவது புதிய விடயம் இல்லை. பயனர்களின் தகவல் திருட ஹேக்கர்கள் பயன்படுத்தும் முதன்மையான தளங்கள் வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் தான். எப்பொழுதும் வாட்ஸ்ஆப்பின் புதிய ஆப்ஷனை பெற அப்டேட் செய்வது மட்டுமே சரியான வழி ஆகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Beware of WhatsApp video calling spam invite link
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்