எச்சரிக்கை : வாட்ஸ்ஆப்பில் உலவகும் மோசடி மெஸேஜ், யாரும் நம்ப வேண்டாம்.!

அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் மோசடி செய்திகள் பரப்பப்படுவது பொதுவான ஒரு விடயமாகி விட்டது, அப்படியாக தற்போதும் ஒரு 'ஸ்கேம்' பரப்பப்பட்டு வருகிறது.

Written By:

வாட்ஸ்ஆப்பில் பரவும் தவறான அல்லது மோசடி செய்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நிச்சயம் மோசமான விளைவுகளில் தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியாக பரவும் மெஸேஜ்களில் உள்ள இணைப்பை கிளிக் செய்வதின் மூலம் மற்றும் சொந்த விவரங்களை அதில் பகிர்வதில் மூலம் மோசடி வேலைகள் நிகழ்த்தப்படலாம்.

அப்படியாக, தற்போது "பிஎஸ்என்எல் வழங்கும் ஒரு வருட கால இலவச 4ஜி வரம்பற்ற தரவு மற்றும் குரல் அழைப்புகள்" என்ற மோசடி செய்தி வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.

இது முற்றிலும் போலியான ஒரு செய்தியாகும், ஒரு பெரிய ஊழலாகவோ அல்லது யாரோ உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கத்திலோ அல்லது பணம் பறிக்கும் எண்ணத்திலோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்ஆப் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வாட்ஸ்ஆப் மோசடி

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4ஜி டேட்டாவை அனுபவிக்கும் மோகத்தில் நாட்டு மக்கள் உள்ள இந்நேரத்தில் மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் அதே போன்ற சலுகையை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த 'தரவு சலுகை' போட்டியை சாதகமாக பயன்படுத்தி, ஸ்கேம்ஸ்டர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிப்பை உண்டாக்கும் மோசடி லின்க்'களை வாட்ஸ்ஆப் மோசடி மெஸேஜ்களாக பரப்பி விட்டுள்ளனர்.

புதிய ஊழல்

ஒரு வருடத்திற்கான பிஎஸ்என்எல் வரம்பற்ற இலவச 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் என்று இப்போது பரவி வரும் வாட்ஸ்ஆப் மெஸேஜ் ஒரு புதிய ஊழல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அதை நம்பி மெஸேஜில் உள்ள இணைப்பை கிளிக் செய்து தனிப்பட்ட தகவல்கள் அல்லது ரீசார்ஜ் ஆகியவைகளை நிகழ்த்த வேண்டாம் என்று கொள்ளப்படுகின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்ஐ..?

மோசடி மெஸேஜில் உள்ள இணைப்பை கிளிக் செய்ய அது நுழையும் வலைதளத்தின் பெயர் பிஎஸ்என்ஐ என்று உள்ளதை பெரும்பாலோனர்கள் கவனிக்காத தவறுகிறார்கள். பிஎஸ்என்எல்-ல் உள்ள 'எல்' தனைஆங்கில வடிவ ஸ்மால் லெட்டர் 'ஐ' என்று மாற்றப் பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

எழுத்துப்பிழை

அந்த போலியான பிஎஸ்என்எல் பக்கத்தில் 4ஜி எக்ஸ்பிரஸ் சிம் அட்டை விளம்பரத்தை பார்க்க முடிகிறது மற்றும் அங்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் நீங்கள் வாழும் இடம் ஆகிய விவரங்கள் கேட்கப்படுகினறன. ஆச்சரியமூட்டும் வண்ணம் பல இடங்களின் பெயர்களில் எழுத்துப்பிழை உள்ளத்தையும் காண முடிகிறது, எடுத்துக்காட்டுக்கு படத்தில் குஜராத் மாநிலத்தின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளதை காண முடியும்

அதிகாரப்பூர்வமான செய்தி

பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமின்றி ஏர்டெல், ஏர்செல், ஐடியா, வோடபோன், ஆர்காம் போன்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான செய்திகளை தமிழ் கிஸ்பாட்டில் படித்து அறிந்துக்கொள்ளவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Beware! ‘One year free 4G data, voice calls from BSNL’ is a WhatsApp scam. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்