பிஎஸ்என்எல் 1125 பிளான், உடனே மாறினால் கிடைக்கும் அட்டகாச நன்மைகள்.!!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அறிவித்த நாள் முதல் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வரும் நிலையில் இம்முறை பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள களத்தில் இறங்கியுள்ளது. அதன் படி பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த வாரம் இரு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அப்படியாக ரூ.1,125 மற்றும் ரூ.1,525 விலையில் போஸ்ட்பெயிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.

மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் ரூ.1,125 திட்டத்தில் என்னென்ன சேவைகளை வழங்குகின்றது என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அன்லிமிட்டெட் அழைப்புகள்

புதிய திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுக்க வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அனைத்து மொபைல் மற்றும் லேண்ட்லைன் நம்பர்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

எஸ்டிடி அழைப்புகள்

இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்டிடி அழைப்புகளும் முற்றிலும் இலவசம் தான். இதற்கும் ஒரு மாத காலம் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.

ரோமிங்

ஜியோவை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணங்களை இலவசமாக்கியுள்ளது. இத்திட்டத்தில் ரோமிங் கட்டணங்கள் இலவசமாக்கப்பட்டுள்ளதோடு அழைப்புகளையும் இலவசமாகப் பெற முடியும்.

3ஜி ரோமிங் டேட்டா

ரோமிங்'இன் போது அழைப்புகள் இலவசமாக்கப்பட்டுள்ளதோடு மாதம் ஒன்றிற்கு 250 எம்பி வரை ரோமிங் டேட்டாவையும் வழங்குகின்றது.

1ஜிபி இலவச 3ஜி டேட்டா

ரோமிங் பயன்படுத்தாத நிலையில் மாதம் ஒன்றிற்கு 1ஜிபி வரை 3ஜி டேட்டாவினை பயன்படுத்த முடியும். மாத அளவு நிறைவடைந்ததும் சராசரி கட்டணம் வசூலிக்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்



English summary
Benefits in Shifting to BSNL 1125 Postpaid Plan from Your Existing Pack Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்