ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பதிலடி கொடுக்கும் பிஎஸ்என்எல்-ன் பிபிஜி1199..!

Written By:

நாட்டின் வளர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது மலிவான பிபி249 திட்டத்தை அறிவித்த இரண்டு வாரங்களுக்கு பின்பு வரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் பிராட்பேண்ட் சேவையை சமாளிக்கும் வண்ணம் மற்றொரு செலவு குறைந்த பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவையான பிபிஜி 1199-ல் முந்தைய மலிவான திட்டமான பிபி249-ல் கிடைக்கும் சில அதே சலுகைகள் கிடைக்கிறது. எனினும் அதில் சில கூடுதல் நன்மைகள் இருக்கிறது. அவைகள் என்னென்ன..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வரம்பற்ற 2 எம்பிபிஎஸ் (Mbps) வேகம் :

பிபி249 திட்டமானது 2ஜிபி பயன்பாட்டுக்கு பின்பு 1எம்பிபிஎஸ் என்ற வேகமாக குறையும் அது போலின்றி சின்ஹா புதிய திட்டமான பிபிஜி 1199 ஆனது தரவு அல்லது வேக வரம்பின்றி நீங்கள் ஒரு முழு மாதமும் வரம்பற்ற 2எம்பிபிஎஸ் வேகம் பெறலாம்.

முடிவற்ற காலிங் :

பிஎஸ்என்எல் பிபிஜி 1199 பேக் ஆனது மாதம் முழுவதிலுமான முற்றிலும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது. உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகளை 24/7 செய்ய அனுமதிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை :

மேலும், பிபி249 திட்டம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வரம்பற்ற அழைப்புகளை மற்றும் இரவு அழைப்புகளை அனுமதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடம் அல்லது 2, 3 ஆண்டுகள் செலுத்த முடியும் :

இந்த புதிய பேக் உடன் பிஎஸ்என்எல் பயனர்கள் முழுமையாக ஒரு மூன்று ஆண்டுகள் வரையிலான முழு பேக் தொகையையும் செலுத்தும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி பிஎஸ்என்எல் உள்ளது. வருடாந்திர செலுத்தும் பயனர்களுக்கு சில தள்ளுபடிகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.

ரூ.1199 / மாதம் :

நிறுவல்செலவுடன் சேர்த்து 6 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிபி249 திட்டத்திற்கு ரூ.249 செலவாகிறது. அதேப்போல பிபிஜி 1199 திட்டத்தையும் மாதாந்திர அடிப்படையில் செலுத்த முடியும்.

பயனர்கள் :

தற்போதைய பயனர்களை பொருத்தமட்டில் இந்த திட்டம் பெரிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பிபி249 திட்டமானது புதிய பயனர்களுக்கு மட்டுமே திறந்து விடபட்டுள்ளது ஆனால் பிபிஜி 1199 திட்டம் தற்போதைய பயனர்கள் அதே சமயம் புதிய பயங்களுக்கும் கிடைக்கப் பெறுகிறது.

மேலும் படிக்க :

உங்கள் நெட்வெர்க்கில் டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?
வை-பை ரௌவுட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.!!
தெரியுமா..? பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Benefits of BSNL BBG 1199 Plan When Compared to BB249 Plan. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்