ஆப்பிள் புதுவரவு : இதெல்லாம் இருக்குமா நம்பலாமா.??

Written By:

ஆப்பிள் நிறுவனம் அடுத்த வெளியிட இருக்கும் கருவியாக அழைக்கப்படும் ஐபோன் 7 இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட இருக்கின்றது. உலகெங்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் பயனர்கள் முதல் ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் வரை அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 7 கருவியில் வழங்கப்பட இருப்பதாகப் பல்வேறு அம்சங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியானது வாடிக்கையானதே.

கடந்த ஆண்டைப் போன்றே இந்த வருடமும் ஆப்பிள் நிறுவனம் இரு ஐபோன் கருவிகளை ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் என்ற பெயரில் வெளியிடலாம். இந்தக் கருவிகளில் வழங்கப்பட இருப்பதாக வல்லுநர்கள் உறுதி செய்திருக்கும் 9 அம்சங்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அளவு

புதிய கருவிகளிலும் முந்தைய கருவிகளில் வழங்கிய அளவு திரை தான் வழங்கப்படும். அதாவது ஐபோன் 7 கருவியில் 4.7 இன்ச் 3டி டச் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவும் வழங்கப்படலாம்.

பிராசஸர்

புதிய ஐபோன் கருவிகளில் ஏ10 (A10) பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்படலாம். ஐபோன் 7 பிளஸ் கருவியில் இரு மடங்கு அதிகமாக அதாவது 4ஜிபி ரேம் வழங்கப்படலாம்.

மெமரி

ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளின் குறைந்த அளவு மெமரியை 16 ஜிபியில் இருந்து 32 ஜிபி வரை உயர்த்தலாம். இதனால் ஐபோன் 7 கருவியின் குறைந்த அளவு மெமரி 32 ஜிபி வரை உயர்த்தப்படுவதோடு அதிகபட்சமாக 256 ஜிபி மெமரி கொண்ட கருவியும் அறிமுகம் செய்யப்படலாம்.

கேமரா

ஐபோன் 7 பிளஸ் கருவியில் இதுவரை இல்லாத அளவு அதிகமாக 16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும், ஐபோன் 7 கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.

இயங்குதளம்

புதிய கருவிகள் நிச்சயம் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும். அதன் படி இந்தக் கருவிகள் ஐஓஎஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கலாம். இதோடு விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட சிரி அம்சங்கள் இருக்கும்.

பேட்டரி

ஐபோன் 7 கருவியானது 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், ஐபோன் 7 பிளஸ் கருவி 4000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கலாம்.

ஹெட்போன்

வழக்கமான ஐபோன் கருவிகளில் வழங்கப்பட்டு வந்த 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு மாறாக லைட்னிங் ஹெட்போன்களை வழங்கலாம் எனக் கூறப்படுகின்றது.

சார்ஜிங்

அதிகளவு பேட்டரி வழங்கப்படும் என்பதால் கருவிகளை வேகமாகச் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்படலாம். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் முதல் முறையாக ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாட்டர் ப்ரூஃப்

பல்வேறு ஆண்ட்ராய்டு கருவிகளிலும் வாட்டர் ப்ரூஃப் அம்சம் வழங்கப்படுவதைத் தொடர்ந்து ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் வாட்டர் ப்ரூஃப் அம்சம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Awesome Features Likely To Make Their Way Into The iPhone 7 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்