ஒன்றில்லை நான்கு : இது நோக்கியா கணக்கு.!

இந்த ஆண்டே நோக்கியா கருவிகள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அந்நிறுவனம் குறித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Written By:

ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் மீண்டும் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. உலகெங்கும் நோக்கிய நலம் விரும்பிகள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்ப சந்தையே நோக்கியா நிறுவனத்தின் வரவினை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் நோக்கியா கருவிகள் 2016 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிய கருவிகள் வெளியீட்டிற்குத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிக்கை

இது குறித்த வெளியாகியிருக்கும் தகவல்களில் நோக்கியா நிறுவனம் நோக்கியா பிரான்டிங் கொண்ட கருவிகளை தாயரிக்கும் வணிக உரிமைகளை HMD Global நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கருவிகள்

அதன் படி HMD Global நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டின் (2016) இரண்டாம் காலாண்டு வாக்கில் இரண்டு கருவிகளை வெளியிட இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு N1 டேப்ளெட்

ஏற்கனவே ஆண்ட்ராய்டு N1 டேப்ளெட் கருவிக்கு நோக்கியா பின்பற்றிய அதே வழிமுறைகளை புதிய கருவிகளுக்கும் பின்பற்றும். அதன் படி கருவியின் வடிவமைப்பு நோக்கியா மேற்கொள்ளும், தயாரிப்பு மற்றும் விற்பனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோக்கியா

இதே போல் நோக்கியா நிறுவனத்தின் புதிய கருவிகளின் வடிவமைப்பு மற்றும் வன்பொருள் சார்ந்த முடிவுகளை நோக்கியா நிறுவனம் மேற்கொள்ளும். இதனால் கருவியின் தரம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் நோக்கியா செலுத்தும்.

உரிமம்

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சந்தையில் மீண்டும் காலடி வைக்கும் நிலையில் நோக்கியா பிரான்டிங் உரிமையினை வேறு நிறுவனத்திடம் வழங்குவது சரியான முடிவு எனச் சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பயன்பாடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி 2016 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரை நோக்கியா தனது பிரான்டிங் மூலம் வியாபாரம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோல்வி

நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றி ஸ்மார்ட்போன் சந்தையில் நிலையான இடத்தைப் பெற நினைத்த மைக்ரோசாப்ட், தனது முயற்சியில் தோல்வியைத் தழுவியது. இந்நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதள கருவிகள் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
At least four Nokia Android phones coming by 2017
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்