ஏசஸ் சென்ஃபோன் 2 இந்தியாவில் ஏப்ரல் மாதம் வெளியாகும்

Posted by:

இந்தியாவில் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஏசஸ் சென்ஃபோன் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே என இரு மாடல்களாக வெளியாவதோடு 4 ஜிபி ராமும் வழங்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்ஃபோன் 2 இந்தியாவில் ஏப்ரல் மாதம் வெளியாகும்

ஏசஸ் சென்ஃபோன் 2, 64 ஜபி இன்டர்னல் மெமரி 4 ஜிபி ராம் கொண்டிருப்பதோடு இந்தியாவில் ரூ. 19,900க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏசஸ சென்ஃபோன் 2 அந்நிறுவனத்தின் ZenUI மூலம் கூகுளின் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மற்றும் Intel Atom SoC கொண்டிருக்கும். சென்ஃபோன் 2 ZE551ML 64 பிட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் Intel Atom Z3580 பிராசஸரும், 2ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் Intel Atom Z3560 பிராசஸரும் கொண்டிருக்கும்.

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
English summary
Asus ZenFone 2 set to Launch by Last Week of April in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்