அசினுக்கு கல்யாணம் : அடடா 'வட போச்சே'..!

Posted by:

இது சந்தோஷமான செய்தியா இல்ல, மனச உடைக்கிற கஷ்டமான செய்தியா... என்பது அவரவர் மனதை பொருத்தது..! "அட.. நம்ம அசினுக்கு கல்யாணம்..!" என்று சந்தோஷப்பட்டாலும் சரி, "அடடா.. வட போச்சே..!" என்று வருத்தப்பட்டாலும் சரி..!!

சொன்னா நம்பவா போறீங்க, நீங்களே பாத்துக்கோங்க..!

'கட்டினா இவராதான் கட்டுவேன்'னு அசின் முடிவு பண்ணிட்டாங்க.. மனச தேத்திக்கிட்டு மேல படிங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், "நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு" என்று 'தமிழ் நாட்டின் செல்லப்பெயர்' வாங்கியர் நடிகை அசின்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களின் நடிகர்களுக்கும் பொருத்தமான ஜோடியான அசின், இப்போது தன் ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டார்..!

அந்த அதிரஷ்டக்காரார் வேறு யாருமில்லை, மைக்ரோமாக்ஸ் மொபைல் நிறுவனரான - ராகுல் ஷர்மா தான்..!

36 வயது நிரம்பிய ராகுல் ஷர்மா, வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்தியாவின் மிக பெரிய மொபைல் கம்பெனிகளில் மைக்ரோமாக்ஸும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது..!

சினிமாவையும், சொந்த வாழக்கையும் தெளிவாக கையாள்பவர் அசின் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டுதான் இது..!

ராகுல் உடன் சில ஆண்டுகள் நட்பில் இருந்த போதும், திருமணம் சார்ந்த தகவல் இப்போது தான் வெளியாகி உள்ளது..!

ராகுல் - அசின் உறவுக்கு இடையே பாலமாக இருந்தது நடிகர் அக்ஷை குமார் தானாம்..!

நடிகர் அக்ஷை குமார், மைக்ரோ மாக்ஸ் அதிபர் ராகுலின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது..!

சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோமாக்ஸின் முதல் ராஜதூதராக (அம்பாசிடார்) அக்ஷை குமாரையும், அவர் மனைவியையும் 'மைக்ரோமாக்ஸ்' அறிவித்தது குறிப்பிடத்தக்கது..!

அசின் - ராகுல் திருமண தேதி விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது..!

கேரளாவில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, வட இந்திய சினிமாவில் மூழ்கி கிடக்கும் அசின், அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் - வாழ்த்துக்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Asin confirms that she will soon be marrying tech billionaire Rahul Sharma
Please Wait while comments are loading...

Social Counting