உங்க கிட்ட இருக்கா, இந்திய அரசு செயலிகள்

Posted by:

ஸ்மார்ட்போன் வரவு பல நன்மைகளையும் பல வேலைகளை சுலபமாகவும் செய்து முடிக்க வழி செய்கின்றது. செயலிகள் இல்லாமல் ஸ்மார்ட்போன் இல்லை என்ற நிலையில் அரசாங்கமும் செயலிகளின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய துவங்கி இருக்கின்றது.

அப்துல் கலாமின் ரகசிய பக்கங்கள்..!

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்ந்த செயலிகள் மெல்ல வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில அரசு சார்ந்த செயலிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நரேந்திர மோடி

ஜூன் 17, 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த செயலி மூலம் மக்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக இணைப்பில் இருக்க முடியும்.

மைகவ்

ஜூலை 1, 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த செயலி இந்திய மக்களை அரசுக்கு யோசனைகளை வழங்க வழி செய்கின்றது.

ஐஆர்சிடிசி

இந்தியா முழுவதும் ரயில் பயனங்களை மேற்கொள்ள இந்த செயலியை கொண்டு பயனச்சீட்டுகளை முன்பதிவு செய்வதில் துவங்கி பல பணிகளை மொபைல் மூலம் செய்து கொள்ளலாம்.

ஸ்வச் பாரத் அபியான்

இந்தியாவை சுத்தமாக்க துவங்கப்பட்ட திட்டமான ஸ்வச் பாரத் குறித்த அநைத்து தகவல்களையும் இந்த செயலியில் பெற முடியும்.

மீஇந்தியா

இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் பிரத்யேக செயலி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

எம்பாஸ்போர்ட் சேவா

வெளியுறவு துறை அமைச்சகத்தின் இந்த செயலி பாஸ்போர்ட் சார்ந்த தகவல்களை வழங்குகின்றது.

இன்கிரெடிபில் இந்தியா

இந்திய சுற்றுலா துறை அமைச்சகத்தின் இந்த செயலி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு சுற்றுலா குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குகின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here the Apps By The Indian Government You Need to Use right now. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்