ஆப்பிள் குழப்பம், புதிய ஐபோன் 5se இல்லையாம்.!!

By Meganathan
|

அது என்னவோ ஆப்பிள் நிறுவனம் என்றால் அனைவருக்கும் மூக்கு வேர்க்கின்றது. பெரிய நிறுவனங்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை என்றாலும் நம்மவர்களுக்கு ரகசியங்களை அறிந்து கொள்வதில் அதிக ப்ரியம் இருக்க தான் செய்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் சார்ந்த தகவல் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றது.

ஆப்பிள் குழப்பம், புதிய ஐபோன் 5se இல்லையாம்.!!

முன்பு ஐபோனின் மாடல் ஐபோன் 5se தான் என கூறப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் பிரபல ஆங்கில இணையதளம் ஒன்றில் புதிய ஐபோன் மாடல் ஐபோன் 5se இல்லை என்றும் இதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள் குழப்பம், புதிய ஐபோன் 5se இல்லையாம்.!!

அதன் படி புதிய ஆப்பிள் போன் மாடல் ஐபோன் SE என்றும் ஆங்கிலத்தில் SE என்றால் ஸ்பெஷல் எடிஷன் என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐபோன் SE கருவியில் 4 இன்ச் திரை, 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஏ9 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் குழப்பம், புதிய ஐபோன் 5se இல்லையாம்.!!

இதோடு ஐபோன் கருவிகளில் இருக்கும் 5 என்ற வார்த்தையை நீக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5 என்ற எண் பழைய ஐபோன் கருவியின் புதுப்பிக்கப்பட்ட கருவியாக இருக்கலாம் என்ற குழப்பத்தை தவிர்க்கவே அந்நிறுவனம் இந்த முடிவு செய்திருக்கலாம் என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் குழப்பம், புதிய ஐபோன் 5se இல்லையாம்.!!

புதிய ஐபோன் SE கருவியானது மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படலாம் என்றும் இதோடு 9.7 இன்ச் திரை கொண்ட ஐபேட் ப்ரோ கருவியும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Apple's new iPhone may not be called iPhone 5se Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X