இன்று இரவு வெளியாவது ஆப்பிள் ஐபோன் 7 மட்டுமல்ல, வேறென்ன என்ன...?

Written By:

ஆப்பிள் நிறுவனம் மீண்டு எழுமா என்ற கேள்விக்கான விடை இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) இரவு தெரிந்துவிடும்..!

இன்று இரவு ஆப்பிள் தனது ஐபோன் 7 வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. "அங்கு சந்திக்கலாம்" என்று அழைக்கபப்டும் இந்த ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வில் வெளியாக இருப்பது நாம் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மட்டுமல்ல..!

ஆப்பிள் என்ன என்ன கருவிகளை வெளியிடப்போகிறது என்ற கேள்விக்கான தெளிவான விடை இன்று இரவு தான் கிடைக்கும் என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் நுகர்வோர்களுக்கு ஆச்சரியங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் :

இந்த இரண்டு சாதனங்கள் நிச்சயம் இன்றிரவு வெளியாகின்றன, நிச்சயமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவியை இன்றிரவு வெளியிடுவதை நாம் காண முடியும்.

மேம்படுத்தப்பட்ட :

வெளியாகப்போகும் இந்த 2 கருவிகளும் முந்தைய மாடலான ஐபோன் 6 மாற்றுயம் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய கருவிகளை மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இரண்டு இமேஜ் சென்சார் :

ஆனால், அவைகளின் அம்சங்களில் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஐபோன் 7 ப்ளஸ் ஆனது இரண்டு இமேஜ் சென்சார்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் கொண்ட வித்தியாசமான் கேமரா அமைப்பு கொண்டு வெளிவர வாய்ப்பு உள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் :

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆப்பிள் வாட்ச் அதன் முதல் அப்டேட்டிற்கு ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தை எடுத்துக் கொண்டு இன்று புதிய அப்டேட்டட் ஆப்பிள் வாட்ச் வெளியாக இருக்கிறது.

வேகமான ப்ராசஸர் :

புதிய ஆப்பிள் வாட்ச் ஆனது புதிய ஜிபிஎஸ் சிப் உடன் மிக துல்லியமான ஜாகிங் கண்காணிப்பை பதிவு செய்ய உதவும், மற்றும் புதிய மென்பொருள், மற்றும் ஒரு வேகமான ப்ராசஸர் உடன் வெளியாகும்.

வயர்லெஸ் பட்ஸ் :

புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் உடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வெளியாகிறது.

இலவசமாக :

அதாவது சாம்சங் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட் போன்ற ஒரு ஒரு கருவியை ஆப்பிள் இன்று வெளியிடலாம். உடன் இதன் விலை மிக அதிகமானதாக இருக்கும் என்றும், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் வாங்குபவர்களுக்கு குறைந்த விலையில், அல்லது இலவசமாக கூட வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேம்படுத்தப்பட்ட மென்பொருள் :

பேட்டா வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்ட மென்பொருள் ஆனது ஆப்பிள் ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச், மேக் மற்றும் ஆப்பிள் ஆகியவைகளில் கிடைக்கிறது. ஆக ஆப்பிளின் இறுதியான சாப்ட்வேர் அப்டேட் ஆன ஐஓஎஸ்10 இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் மேலும் ஒரு விடயம் :

அறிவிக்கப்படாத ஆச்சரியமான வெளியீட்டுக்கு பிரபலமான ஆப்பிள் நிகழ்வில் இன்றும் ஏதாவது ஒரு இன்ப அதிர்ச்சியை ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க :

பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??
புதிய ஐபோன் அறிமுகம் : மீண்டு எழுமா ஆப்பிள்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Apple's iPhone 7 launch event: Not just phones, also expect new Apple Watch tonight. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்