மறுபடியுமா, 5.8 இன்ச் திரையில் புதிய ஐபோன்.??

By Staff
|

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் கருவிகளை வெளியிட்டு சில தினங்களே நிறைவடைந்திருக்கின்றது. புதிய கருவியே இன்னும் விற்பனைக்கு வராத நிலையில் அந்நிறுவனம் தயாரித்து வரும் புதிய கருவி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த கருவியானது அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்றாலும், இந்த கருவியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக வெளியாகும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

திரை

திரை

அதன் படி புதிய ஐபோன் கருவியில் 5.7 இன்ச் ஏஎம்ஓஎல்இடி திரை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

அலுமினியம்

அலுமினியம்

வழக்கமான அலுமினியம் வடிவமைப்பு இல்லாமல் இந்த கருவியில் கர்வுடு கிளாஸ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்வெஸ்டர் நோட்

இன்வெஸ்டர் நோட்

ஆப்பிள் இன்ஸைடர் தளத்திற்கு கிடைத்த இன்வெஸ்டர் நோட் மற்றும் ஆப்பிள் சார்நத தகவல்களை கச்சிதமாக கணிக்கும் ஜேஜிஐ அனலிஸ்ட் மிங்-சி கியோ எதிர்பார்ப்புகளின் படி புதிய கருவியில் ஐபோன் 4 / 4எஸ் கருவிகளை போன்றே 'கிளாஸ் சான்ட்விட்ச்' வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

மேலும் இன்வெஸ்டர் நோட் அறிக்கையில் கிடைத்த தகவல்களின் படி புதிய கருவியானது கவர்ச்சியான பொருள்களை கொண்டு வடிவமைக்கப்படலாம் என்றும் இவை போட்டியாளர்களிடம் இருந்து ஐபோன் கருவிகளை பிரித்து வித்தியாசமாக காட்டும் என்றும் கியோ தெரிவிக்கின்றார்.

எடை

எடை

முன்பு தெரிவித்திருந்ததை போன்று ஆப்பிள் நிறுவனம் இம்முறை கிளாஸ் வடிவமைப்பை தேர்வு செய்யலாம் என்றும், இதனால் கருவியை எளிதாக வடிவமைக்க முடியும் என்பதோடு கருவி மெலிதாகவும், எடை குறைவாகவும் இருக்கும் என்றும் கியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாற்று

மாற்று

கிளாஸ் வடிவமைப்பை தவிர்த்து ப்ளாஸ்டிக் அல்லது செராமிக் உள்ளிட்டவைகளையும் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தலாம் என்றும் கியோ தெரிவித்துள்ளார்.

அம்சங்கள்

அம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன் கருவியில் வயர்லெஸ் சார்ஜிங், புதிய பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களான ஃபேஸ் மற்றும் ஐரிஸ் ஸ்கேனிங் அதாவது முகம் மற்றும் கண் விழியை ஸ்கேன் செய்யும் வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம்

நிறுவனம்

புதிய அம்சங்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் எமோடென்ட் மற்றும் ஃபேஸ்ஷிஃப்ட் என இரு நிறுவனங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு

வெளியீடு

முன்னதாக 5.8 இன்ச் திரை மற்றும் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் கருவிகள் 2017-2018 காலக்கட்டத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை

அறிக்கை

மேலும் இன்வெஸ்டர் நோட் அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 ப்ளஸ் கருவிகளை இரு மாடல்களில் வெளியிட இருப்பதாகவும், இதில் ஒரு கருவியில் சிங்கிள்-லென்ஸ் கேமராவும் மற்றொன்றில் டூயல்-லென்ஸ் கேமராவும் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு டூயல்-லென்ஸ் கேமரா கொண்ட கருவியானது சந்தையில் ஐபோன் ப்ரோ என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் எஸ்இ அறிமுகம், கருவியின் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள்.!!

ஐபோன் எஸ்இ விலை ரூ.30,000 இல்லை அதுக்கும் மேல.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Apple plans a 5.8-inch iPhone with wireless charging Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X