பேட்டரி பிரச்சனை ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளியானது..

Written By:

ஐபோன் ப்ரியர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைக்கும் விதமாக அந்நிறுவனம் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வகைகளை ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 கருவிகளுக்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்கேஸ்கள் ஐபோன் பேட்டரிகளை சுமார் 25 மணி நேரம் வரை நீட்டிக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி பிரச்சனை ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளியானது..

சார்கோல் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் கேஸ் மைக்ரோஃபைபர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஐபோன் பேட்டரி குறியீடு மற்றும் ஸ்மார்ட் பேட்டரி குறியீடுகளை ஐபோனின் நோட்டிபிகேஷனில் பார்க்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருவியை சார்ஜ் செய்யும் போது ஐபோனின் பேட்டரி மற்றும் கூடுதல் பேட்டரி அளவுகளை ஐபோன் லாக் ஸ்கிரீனில் பார்க்க முடியும். இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தும் போது 25 மணி நேரம் கூடுதல் பேட்டரியும், இண்டர்நெட் பயன்படுத்தும் போது சுமார் 18 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரி பிரச்சனை ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளியானது..

இந்தியாவில் இந்த கருவி ரூ.6,600க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஸ்மார்ட் கேஸ் மாடல்கள் ஐபோனின் முந்தைய மாடல்களுக்கும் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple Launches Smart Battery Case for iPhone 6s. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்