தயாரிக்க ரூ.10,500, ஆனால் விற்பனை விலை ரூ.40,000 : அசத்தும் ஆப்பிள்.!?

Written By:

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக அறியப்படும் ஆப்பிளை புதிய சிக்கலில் சிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் என்றால் வியப்படைவோருக்கு மத்தியில் ஆப்பிள் கருவிகளை அதிக பணம் கொடுத்து உடனடியாக வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியை ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இது போன்ற தகவல் ஏற்கனவே சில முறை வெளியானது பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம். குறிப்பாக வெளியான தகவல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எவ்வித பதில் அளிக்கவில்லை என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வதிமாக புதிய ஐபோன் கருவியை கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.

விற்பனை

4 இன்ச் திரை கொண்ட இந்த கருவியின் விற்பனை இந்தியாவில் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்ச்சை

இந்நிலையில் புதிய கருவிகளின் விலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஐஎச்எஸ் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விலை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE கருவிகள் இந்தியாவில் ரூ.39,000 முதல் விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது. இதனிடையே இந்த கருவிகளின் தயாரிப்பு விலை ரூ.10,574 மட்டும் தான் என்கின்றது ஐஎச்எஸ் ஆய்வு நிறுவனம்.

தூண்டுதல்

ஐபோன் SE 16 ஜிபி மாடலின் விலை வாடிக்கையாளர்களை 64ஜிபி மாடல் கருவியை வாங்க தூண்டும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஐஎச்எஸ் ஆய்வாளர் ஆன்ட்ரூ ராஸ்வெய்லர் தெரிவித்துள்ளார்.

இணைப்பு

ஐபோன் 5எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் கருவிகளின் ஒருங்கிணைந்த மாடல் தான் ஐபோன் SE. பழைய மாடல்களில் வழங்கப்பட்ட சில அம்சங்களை ஒரே கருவியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apple iPhone SE costs only Rs 10,500 to make Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்