ஆப்பிள் ஐஓஎஸ் 9 பீட்டா வெளியானது..!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் ஐஓஎஸ் 9 பீட்டா வெர்ஷனினை அறிவித்தது. இந்த பீட்டா வெர்ஷன் பதிவு செய்து டெவலப்பர்களுக்கு மட்டும் கடந்த மாதம் வழங்கப்பட்டு, தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ரூ.6,300க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் 9 பீட்டா வெளியானது..!

ஐஓஎஸ் 9 பீட்டா பதிப்பின் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமானது, போனில் இருக்கும் புகைப்படங்களை தானாக டிடெக்ட் செய்து செல்பீ மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை தனியாக பதிவு செய்யும். இதன் மூலம் உங்களது போட்டோ லைப்ரரி தேவையில்லாத புகைப்படங்களால் நிரம்பி வழியாது.

புகைப்படம் எடுக்கப்படுவதை துள்ளியமாக கண்காணித்து அவற்றை பிரிக்க ஆப்பிள் நிறுவனம் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்களில் டைம்-லேப்ஸ், ஸ்லோ-மோ, பர்ஸ்ட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களுக்கு தனி ஃபோல்டர் ஏற்கனவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐஓஎஸ் 9 பீட்டா வெளியானது..!

ஸ்கிரீன்ஷாட் மற்றும் செல்பீக்களை அடையாளம் காணும் பிரத்யேக மென்பொருள் ப்ரோகிராம்களை கூகுள் போட்டோஸ் பயன்படுத்தி வருகின்றது. WWDC 2015, விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 9 அறிமுகப்படுத்தியது. இதை இன்ஸ்டால் செய்ய 1.8 ஜிபி மெமரி தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple announced the iOS 9 beta release. The beta version was made accessible to registered developers last month, but now the public beta are free for all.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X