புதிய பெயரில் பழைய ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட ஐஓஎஸ் 9.3.!!

Written by: Aruna Saravanan

ஆப்பிள் நிறுவன தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஆப்பிள் ஐஓஎஸ் 9.3 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை உங்கள் ஐபேட் மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். புதிய ஐஓஎஸ் இயங்குதளம் பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

ஐஓஎஸ் 9.3 இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு வசம் இருந்த சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நைட் ஷிஃப்ட் அம்சம்

இது ஐஓஎஸ் கடிகாரம் மற்றும் ஜியோலொகேஷன்ஸ்'ஐ பயன்படுத்துகின்றது. இதை கொண்டு சூரிய மறைவுக்கு ஏற்ப திரையின் நிறங்களை தானாக மாற்றியமைக்கும். இது பல வருடங்களாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Twilight எனும் செயலியை பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்தின் சூரிய மறைவை கணக்கிட்டு அதற்கேற்ப திரையின் நிறங்களை மாற்றியமைக்கும்.

நோட்ஸ்க்கு டச் ஐடி

ஐஓஎஸ் கருவியில் பல செயல்பாடுகளுக்கு நீங்கள் நோட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். உங்கள் வருமான தகவல், மருத்துவ தகவல், இணையத்தள கணக்குகள் போன்றவற்றை இதில் சேமித்து வைத்து கொள்ள முடியும். இதற்கு கடவுச்சொல் மற்றும் உங்கள் கை ரேகையை கொண்டும் லாக் செய்து வைக்க முடியும்.
கூகுள் ப்லே ஸ்டோரில் இதே அம்சம் கொண்ட பல ஆண்ட்ராய்ட் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றது. அந்த வகையில் ColorNote எனும் செயலி உங்கள் நோட்ஸ்க்கு கடவுச்சொல் வைத்து அதன் பயனை பாதுகாப்பாக அனுபவிக்க முடியும்.

கார்ப்ளே மற்றும் ஆப்பிள் இசை

ஐஓஎஸ் 9.3யுடன் கார்ப்ளே உபயோகமான அம்சங்களை கொண்டுவந்துள்ளது. ஆப்பிள் இசையில் எண்ணற்ற பாடல்கள், ஆல்பம் என பலவற்றை அனுபவிக்க முடியும். இது ஏற்கனவே ஆண்ட்ராய்ட் ஆட்டோவுடன் வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் ப்லே மியூசிக்கில் பயன்பெற முடியும்.

பல கணக்குகள்

ஆப்பிள் தன் ஐபேடுக்கு மல்டி யூஸர் மோட் கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம் கல்வி நோக்கத்திற்காக ஐபேட்களில் மட்டுமே வரும். இதன் மூலம் மாணவர்கள் பல டேப்லெட்களில் லாக் இன் செய்து ஆப்களையும் தரவுகளையும் பெற முடியும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த அம்சத்தில் இரு வித கணக்குகள் உள்ளன. ஒன்று குறைவான அதாவது limited profile மற்றொன்று user account.

புதிய ஆப்

இந்த புதிய ஐஓஎஸ் அப்டேட் இப்பொழுது பயன்பாட்டாளர்களுக்கு பிடித்தமானவைகளை கொண்டு வருகின்றது. புதிய Fovoritesஐ அறிமுகப்படுத்துகின்றது. எனினும் ஐஓஎஸ் செய்தி ஆப்பை போல ஏற்கனவே கூகுள் செய்தி பயன்பாட்டில் இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Apple iOS 9.3 Features Borrowed From Android Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்