ஃபோர்ஸ் டச் கொண்ட இரு ஆப்பிள் கருவிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன

Written By:

ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் அதிகளவு ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பாளர்களை 4.7 மற்றும் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இரு ஐபோன் மாடல்களை சுமார் 85 முதல் 90 மில்லியன் யூனிட் வரை தயாரிக்க வேண்டும் என கூறியிருப்பதாக கூறப்படுகின்றது.

ஃபோர்ஸ் டச் கொண்ட இரு ஆப்பிள் கருவிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன

இதற்கு முன் ஆப்பிள் நிறுவனம் சுமார் 70 முதல் 80 மில்லியன் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய ஐபோன்களில் ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் கொண்ட ஐபோன் தயாரிப்பில் இருப்பதாக ப்ளூம்பர்க் கடந்த மாதம் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. உதிரி பாகங்களின் தயாரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் புதிய கருவிகளை வேகமாக உருவாக்க அதிகளவில் ஊழியர்களை பணியில் சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Apple Inc is preparing for the largest initial production run for its next iPhones by the end of the year, the Wall Street journal reported.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்