புதிய ஐபோன் அறிமுகம் : மீண்டு எழுமா ஆப்பிள்.?

Written By:

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் கருவியினை செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. சான் பிரான்சிஸ்கோவில் இந்த விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7 கருவியில் மேம்படுத்தப்பட்ட அதிவேகமான சிப்செட், உயர் ரக கேமரா, மேம்படுத்தப்பட்ட மென்பொருள், ஹெட்போன் ஜாக் போன்றவை நீக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பீட்ஸ்

ஆப்பிள் விழாவில் அந்நிறுவனம் வையர்லெஸ் ஹெட்போன் கருவிகளை அறிமுகம் செய்யும் என்றும் கூறப்படுகின்றது. இரு ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனம் பீட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களை ஆண்டிற்கு ஒரு முறை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்

ஜூலை மாதம் ஆப்பிள் நிறுவனம் 100 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. ஸ்மார்ட்போன் சந்தையில் இது ஆப்பிளின் புதிய மைல்கல் சாதனையாகும்.

சரிவு

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஐபோன் கருவிகளின் விற்பனை சரிவை சந்தித்தும், ஆப்பிள் வரலாற்றில் இது தொடர்ச்சியான சரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்ஜி

ஆப்பிள் நிவகழ்வு நடைபெறும் முன் எல்ஜி நிறுவனம் தனது வி20 எனும் கருவியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வும் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு நௌக்கட்

ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை எல்ஜி வி20 பெறுகின்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 7 கருவிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

அப்டேட்

ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனம் புதிய கருவிகளை அறிமுகம் செய்வதோடு தனது பழைய கருவிகளுக்கும் அப்டேட்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபோன்

புதிய ஐபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் கருவிகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய இயங்குதள பதிப்பினையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஆப்பிள்

பல்வேறு வீழ்ச்சிகளைச் சந்தித்து வரும் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளைக் கொண்டு சந்தையில் மீண்டு எழுமா என்பதே சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Apple event has world watching for new iPhone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்