ஐபோன் எஸ்இ விலை ரூ.30,000 இல்லை அதுக்கும் மேல.!!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மற்றும் ஐபேட் ப்ரோ என இரு கருவிகளை நேற்று இரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. புதிய ஐபோன் கருவியை இந்திய சந்தையில் ரூ.30,000இல் இருந்து விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்தியாவில் புதிய ஐபோன் கருவியின் விலை ரூ.39,000 முதல் துவங்கும் என்றும் இவை ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி வருத்தமளிக்கலாம் என்றாலும் இவைகளின் விற்பனை அமோகமாக இருக்கும் என்றே சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திரை மற்றும் எடை

திரை மற்றும் எடை

ஐபோன் எஸ்இ கருவியில் 4 இன்ச் ரெட்டினா திரை மற்றும் ஐபோன் 5எஸ் போன்ற வடிவமைப்பு மற்றும் நான்கு வித்தியாசமான நிறங்களில் கிடைக்கின்றது. 7.6 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவியின் எடை 113 கிராம் ஆகும்.

 சிப்செட்

சிப்செட்

மேலும் ஏ9 சிப் 64-பிட் எம்9 மோஷன் கோ-பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதால் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஐஓஎஸ் 9 இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியானது 3ஜியில் 14 மணி நேரமும் எல்டிஇ பயன்படுத்தும் போது 13 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 12 எம்பி ஐசைட் ப்ரைமரி கேமரா, லைவ் போட்டோ அம்சம் மற்றும் 1.2 எம்பி செல்பீ கேமரா மற்றும் எச்டி பதிவு செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் எஸ்இ அறிமுகம், கருவியின் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள்.!!


ஐபோன் தான் வேண்டுமா, வாங்கும் முன் சில பரிசீலனைகள்.!!

கூகுள் மறைத்த ரகசியம் அம்பலம்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Apple Confirms iPhone SE starting price is Rs 39,000 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X