செப்டம்பர் வெளியீடு உறுதியானது : ஐபோன் 7'இல் என்ன எதிர்பார்க்கலாம்.??

Written By:

அனைவரவும் எதிர்பார்த்ததைப் போல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவியின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆப்பிள் நிறுவனம் சார்பில் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இம்முறை ஐபோன் கருவியுடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் கருவியும் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மாற்றம்

புதிய ஐபோன் கருவியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் இவற்றின் வடிவமைப்பு முந்தைய கருவிகளை தழுவியே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்சங்கள்

மற்ற அம்சங்களைப் பொருத்த வரை புதிய ஐபோன் வாட்டர் ப்ரூஃப், ஃபோர்ஸ் டச் ஹோம் பட்டன் மற்றும் டூயல் கேமரா செட்டப் போன்றவை வழங்கப்படலாம் என்றும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம்.

சிப்செட்

வெளியாக இருக்கும் ஐபோன் கருவியில் ஏ10 சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்படலாம். ஹோம் பட்டன் இல்லாத சூழ்நிலையில் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

ஹோம் பட்டன்

ஃபோர்ஸ் டச் அம்சம் கொண்ட ஹோம் பட்டன் மற்றும் அல்ட்ரா சோனிக் கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெறும்.

மெமரி

முன்பு வெளியான தகவல்களில் 32, 64, மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட கருவிகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் இதற்கான முன்பதிவுகள் செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்கி விற்பனை 23 ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Apple confirmed iPhone 7 launch on 7 September Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்