தோல்வியில் முடிந்த அப்துல் கலாமின் ஒரே முயற்சி..!

Written By:

சிறிய ஹோவர்கிராஃப்ட் ஊர்திகளின் வடிவமைப்பில் தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாக்க வல்ல இந்திய ஏவுகணை வரை வெற்றிகரமாய் வடிவமைத்த,  மறைந்த முன்னாள் மக்களின் ஜனாதிபதி' அப்துல் கலாமின் சரித்திரத்தில் கைவசம் வாராமல் போன ஒரு சிறு தோல்வியும் பதிவாகியுள்ளது.

அந்த விடயம் சார்ந்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானியும் இஸ்ரோ , எந்திரவியல் பொறியியல் துறை மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றும் திரு.ஏ. சிவதாணுப்பிள்ளை..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இஸ்ரோ - டி.ஆர்.டி.ஓ :

இந்திய முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவையும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ-வையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்துள்ளார்.

முயற்சி :

அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்று ஒரு உரையாடலின் போது இஸ்ரோவின் கெளரவ பேராசிரியரும், விஞ்ஞானியுமான சிவதாணுப்பிள்ளை கூறியுள்ளார்

சாத்தியம் இல்லை :

"பல வெளிநாடுகளின்,பல்வேறு திட்டங்களில் இஸ்ரோ ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஒரு இணைப்பு சாத்தியம் இல்லை" என்றும் சிவதாணுப்பிள்ளை கூறியுள்ளார்.

விண்வெளி சந்தை :

"இஸ்ரோவின் விண்வெளி சந்தையின் மதிப்பு 250 பில்லியன் டாலர்கள் ஆகும். பல நாடுகள் செயற்கைக்கோள்களை உருவாக்க இஸ்ரோவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது"

மாணவர்கள் :

"அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் கூட இஸ்ரோவில் இலவசமாக செயற்கைக்கோள்களை தொடங்குகிறார்கள்" என்றும் சிவதாணுப்பிள்ளை கூறியுள்ளார்.

சிவசுப்பிரமணியன் :

இஸ்ரோவின் முன்னாள் தலைமை பொது மேலாளர் ஆன சிவசுப்பிரமணியன் எழுப்பிய கேள்விகளுக்கு தான் சிவதாணுப்பிள்ளை பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஆராய்ச்சி :

டி.ஆர். டி.ஓ. (DRDO) என்பது இந்திய குடியரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation) ஒரு நிறுவனமாகும், இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏன்..?

இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
APJ Abdul Kalam tried to merge ISRO and DRDO. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்