பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் : இந்திய நிறுவனம் அசத்தல்!

Written By:

இந்தியாவைச் சேர்ந்த இன்டெக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் மற்றும் ஓர் ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.2 என பெயரிடப்பட்டுள்ள புதிய கருவியில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் : இந்திய நிறுவனம் அசத்தல்!

புதிய இன்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.2 கருவியில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 5.0 இன்ச் திரை மற்றும் 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 1.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருக்கும் இந்தக் கருவியில் 32 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் LTE, HSPA, ப்ளூடூத் 4.2, வை-பை, மைக்ரோ யுஎஸ்பி கனெக்டிவிட்டி மற்றும் 2800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இத்தகைய அம்சங்கள் கொண்டிருக்கும் இந்தக் கருவியின் விலை ரூ.6,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Another 4G budget smartphone from Intex surfaces; priced at Rs 6,400
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்