வரலாற்றில் முதன்முறையாக ஆப்பிளின் முன்பு 'தலைகுனியும்' ஆண்ட்ராய்டு.!

இன்னும் சொல்லப்போனால் தீம்பொருள்கள் ஆனது 99.9 சதவீதம் ஆண்ட்ராய்டு சாதனங்களைத்தான் இலக்காக கொண்டுள்ளது.

|

ஆண்ட்ராய்டு vs ஆப்பிள் ஆகிய இரு சாதனங்களின் ரசிகர்களும் போட்டிபோட்டுக் கொள்வதில் எவ்வளவு ஆர்வமாக உள்ளனரோ, அதே அளவிலான ஆர்வத்தில் தான் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. எது சிறந்தது.? எது மதிப்பானது என்று போட்டிபோட்டு கொள்ளும் நாம், எது பாதுகாப்பானது என்ற கேள்வி எழ சந்தேகமே இன்றி - ஆண்ட்ராய்டு தான் என்று கூறிவந்தோம் அல்லவா.??

இனிமேல் அப்படி கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்8, எச்டிசி யூ11 மற்றும் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 5 போன்ற சாதனங்கள் யுனிவர்சல் டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் கருவிகளுக்கு தீவிர போட்டியாக தெரிந்தாலும் ஆப்பிள் கருவிகளின் மீதான மவுசு குறையவேயில்லை என்பதில் சந்தேகமில்லை.

கிட்டத்தட்ட 39 சதவீத உயர்வு

கிட்டத்தட்ட 39 சதவீத உயர்வு

எனினும், ஆண்ட்ராய்டை விட ஆப்பிள் நிறுவனத்தின் காய் மேல் ஓங்கி உள்ளது போல தெரிகிறது. சமீபத்தில் சீனாவில் இருந்து வெளியான அறிக்கைகளின்படி, தீம்பொருளில் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 39 சதவீத உயர்வு உள்ளது, அதாவது அவைகள் பெரும்பாலும் கூகுளின் பிரபலமான இயக்க முறைமையை இலக்காக கொண்டுள்ளது என்று அறிவிக்கிறது.

99.9 சதவீதம் ஆண்ட்ராய்டு

99.9 சதவீதம் ஆண்ட்ராய்டு

இன்னும் சொல்லப்போனால் தீம்பொருள்கள் ஆனது 99.9 சதவீதம் ஆண்ட்ராய்டு சாதனங்களைத்தான் இலக்காக கொண்டுள்ளது என்றும் வெளியான சீன அறிக்கைகள் தெரிவிக்கிறது.

2016 ஆம் ஆண்டில் மட்டுமே

2016 ஆம் ஆண்டில் மட்டுமே

சீன இணையம் மற்றும் தேசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க் அவசர பதில் தொழில்நுட்பக் குழு / ஒருங்கிணைப்பு மையமானது கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டுமே இரண்டு மில்லியன் புதிய தீங்கிழைக்கும் மொபைல் தாக்குதல்களை கண்டுபிடித்ததாக கூறுகின்றது.

புதிய தீம்பொருள்கள்

புதிய தீம்பொருள்கள்

இதுபோன்ற புதிய தீம்பொருள்கள் மூலம் ஆண்ட்ராய்டில் இயங்கும் 1.9 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் இணைய அச்சுறுத்தல்களினால் பாதிக்கப்படும் என்ற நம்பமுடியாத தகவலை மையத்தின் ஒரு பொறியியலாளர் அறிவித்துளார்.

ஏன் ஆண்ட்ராய்டு இன்னும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன.?

ஏன் ஆண்ட்ராய்டு இன்னும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன.?

ஆண்ட்ராய்டுதனை பொருத்தம்மட்டில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, மேம்படுத்தல்கள் வெளியிடப்படுவதாகும். பிக்சல் போன்ற சமீபத்திய கூகுள் பிராண்டட் சாதனங்களில் ஒன்றை பயனர்கள் கொண்டிராத பட்சத்தில், மிகச் சமீபத்திய மென்பொருல்களை அவர்களால் அணுகமுடியாது.

பிரதான காரணி

பிரதான காரணி

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர், மேம்படுத்தல் சார்ந்த சோதனைகளை நடத்துவதே இந்த சிக்கலுக்கு பிரதான காரணியாகும். இதனால் பழைய ஆண்ட்ராய்டு சாதனங்கள் அவற்றின் மேல்-இறுதி கருவிகள் பெறும் மேம்படுத்தல்களை கூட பெறுவதில்லை.

79% ஐஓஎஸ் சாதனங்களில்

79% ஐஓஎஸ் சாதனங்களில்

மறுபக்கம் ஒப்பீட்டளவில், ஆப்பிள் தனது புதிய ஐஓஎஸ்10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டதுடன், சுமார் ஐந்து மாதங்களில் செயலில் உள்ள 79% ஐஓஎஸ் சாதனங்களில் அதை மேம்படுத்தவும் செய்தது. இதன்மூலம் ஐஓஎஸ் பயனர்கள் சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிடம் இருந்து பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

மென்பொருள் மேம்படுத்தல்

மென்பொருள் மேம்படுத்தல்

ஆப்பிள் ஒருபக்கம் கடுமையான ஹார்டுவேர் மற்றும் மென்பொருட்களின் இறுக்கமான கட்டுப்பாடு கொண்டிருந்தாலும் கூட சமீபத்திய மென்பொருள் மேம்படுத்தல் ஆனது சாதன உரிமையாளர்களை மேலும் திறன் கொண்டவர்களாய் செதுக்கியுள்ளது.

ஒரே நாள் இரவில்

ஒரே நாள் இரவில்

இந்த தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் உரிமையாளர்களை சமீபத்திய ஐஓஎஸ் பதிப்பிற்கு மாற அறிவித்துள்ள வண்ணம் இருக்க மறுபக்கம் சாதனம் ப்ளக் இன் செய்யப்பட்டு இருந்தால் குறிப்பிட்ட மென்பொருள் மேம்படுத்தல் ஆனது ஒரே நாள் இரவில் நிறுவுவதற்கான விருப்பத்தையும் வழங்கி வருகிறது.

அதேபோல

அதேபோல

மறுபக்கம் ஆப்பிள் நிறுவனம் எப்படி அதன் ஐஓஎஸ் சாதனங்களின் வன்பொருள் பங்காளர்களுக்கு எளிதாக மற்றும் வேகமாக புதுப்பிப்புகளை வழங்குகிறதோ அதேபோல புதிய திருத்தங்களை கொண்டுவர கூகுள் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Android vs iPhone - Latest news may prove why Apple continues to have the upper hand. Read more about this in Tamil GizBot.Android vs iPhone, Andr

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X