நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று சொல்லும் 'ஆன்லைன் கால்குலேட்டர்'..!

Written By:

நீங்கள் சரியாக எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சராசரி ஆயுளைப்பெற சாத்தியமான அத்துணை காரணிகளையும் விஞ்ஞானிகள் கண்டறிந்து கொண்டே தான் இருக்கின்றன.

அப்படியாக பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நீங்கள் எப்போது மரணம் அடைவீர்கள் என்பதை அறிந்து கொள்ள மரபணு சோதனை தேவையில்லை, இந்த ஆன்லைன் கால்குலேட்டர் போதும் என்கிறார் பாஸ்டன் நகரை சேர்ந்த விஞ்ஞானியான தாமஸ் பெர்ல்ஸ் (Thomas Perls)..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பேராசிரியர் :

விஞ்ஞானியான தாமஸ் பெர்ல்ஸ் முதியோர்களுக்கு வரும் நோய்களைக் கவனிக்கும் ஒரு மருத்துவர் என்பதும் பாஸ்டன் மருத்துவ பல்கலைகழகத்தில் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மாபெரும் ஆய்வு :

மேலும் உலகில் உள்ள 100 வயதை தாண்டி வாழும் பெரும்பாலான மனிதர்களை வைத்து மாபெரும் ஆய்வு (the largest study of centenarians in the world) நிகழ்த்திய பெருமையையும் தாமஸ் பெர்ல்ஸ்க்கு சேரும்.

ஆன்லைன் கால்குலேட்டர் :

அந்த ஆய்வின் மூலம் உருவானது தான் - மரணத்தை கண்டுபிடிக்க உதவும் ஆன்லைன் கால்குலேட்டர். இந்த ஆன்லைன் டூல் மூலம் உங்கள் தோராயமான ஆயுளை கணக்கிட முடியும்.

கேள்வி - பதில் :

இந்த ஆன்லைன் டூல் உங்கள் சீட்பெல்ட் பயன்பாடு, உங்கள் குடும்ப மருத்துவ வரலாறு, உங்கள் வேலை அட்டவணை , மேலும் பல கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொள்ளும்.

ஆயுள் காலம் - அறிவுரை :

பின்பு உங்கள் தோராயமான ஆயுள் காலம் சார்ந்த பதில் வெளியிடப்படும், உடன் சேர்த்து நீங்கள் என்னென்ன பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்படும்.

மரபியல் மற்றும் குடும்ப வரலாறு :

ஆயுள் சம்பந்தப்பட்ட விடயத்தை பொருத்த மட்டில் உங்கள் மரபியல் மற்றும் குடும்ப வரலாறு தான் மிகவும் அத்தியாவசியமானது. "நீங்கள் 90 வயது வரை வாழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது" என்கிறார் தாமஸ் பெர்ல்ஸ்.

இமெயில் மற்றும் கடவுச்சொல் :

40 கேள்விகளை உள்ளடக்கிய இந்த ஆன்லைன் டூல் வழங்கும் உங்களது ஆயுள் சார்ந்த இறுதி முடிவை பார்ப்பதற்கு உங்கள் இமெயில் முகவரி மற்றும் தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிக் செய்யவும் :

உங்கள் ஆயுள் பற்றி தெரிந்துக்கொள்ள உதவும் ஆன்லைன் கால்குலேட்டர் டூலை அடைய இங்கே கிளிக் செய்யவும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
An online calculator that tells you when you will die. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்