நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல், ஏலியன் கருவியா ?!

Written By:

சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மொபைல் போன்ற கருவி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் உலகம் எங்கிலும் உள்ள கான்ஸ்ப்பிரஸி தியேரிஸ்ட்ஸ் (conspiracy theorists) எனப்படும் சதி ஆலோசனை கோட்பாடாளர்கள் தத்தம் கருத்துக்களைபகிர்ந்த வண்ணம் இருக்க மறுபக்கமோ இது புரளியின் உச்சம் என்ற கருத்தும் வலுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இது சார்ந்த பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆஸ்ட்ரியா :

800 வருடம் பழமை என்று கூறப்படும், மொபைல் போன் போன்ற கருவி ஒன்று ஆஸ்ட்ரியாவில் (Austria) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

க்யூனிபார்ம் எழுத்துக்கள் :

களிமண் வடிவத்தில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த மொபைல் போனில் க்யூனிபார்ம் எழுத்துக்கள் (cuneiform writing) பொறிக்கப் பெற்றுள்ளன.

கி.மு.3000 :

க்யூனிபார்ம் எழுத்துக்களை தமிழில் ஆப்பெழுத்துக்கள் என்பர், இது சுமார் கி.மு.3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம் :

பட்டன்களில் க்யூனிபார்ம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு நோக்கியா மாடல் போல் தான் இது காட்சி அளிக்கிறது என்ற விமர்சனமும் எழுந்த வண்ணம் உள்ளது.

யூஎஃப்ஓ நம்பிக்கையாளர்கள் :

இருப்பினும் பிற யூஎஃப்ஓ நம்பிக்கையாளர்கள் இதை ஒரு ஏலியன் தேடல் சார்ந்த ஆதாரமாகத்தான் பார்க்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்பாடுகள் :

மேலும், இந்த 800 வருட பழமையான மொபைல் போன்ற கருவியானது ஏலியன்கள் பூமிக்கு வருகை தந்ததற்கோ அல்லது டைம் டிராவல் என்ற காலத்தை தாண்டி பயணித்தல் என்ற விடயத்திற்கோ சான்றாகும் என்றும் சதி ஆலோசனை கோட்பாடுகள் கிளம்பி உள்ளன.

யூட்யூப் சேனல் :

பராநார்மல் க்ரூஸிபல் (Paranormal Crucible) என்ற யூட்யூப் சேனல் தான் இது சார்ந்த வீடியோவை வெளியிட்டு, "இது என்ன..? ஏலியன் நாகரீகத்தின் அடையாளமா..?" என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உறுதி :

டு தி டெத் மீடியா (tothedeathmedia.com) என்ற கான்ஸ்ப்பிரஸி தியேரிஸ்ட்ஸ் வலைதளம் ஆனது "13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, மொபைல் போன் போன்று காட்சி அளிக்கும் பொருள் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்ட்ரியாவில் கண்டுப்பிடித்துள்ளனர்" என்பதை உறுதி செய்துள்ளது.

ஈரான் அல்லது ஈராக் :

மேலும் "இவ்வகையான க்யூனிபார்ம் எழுத்துக்கள் நவீன கால ஈரான் அல்லது ஈராக்கில் தான் கிடைக்கப்பெறுகின்றது" என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளது.

விளக்கம் :

"இது சார்ந்த தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதால், துரதிஷ்டவசமாக இந்த 'பரபரப்பான' கண்டுபிடிப்பு பற்றிய மேலும் பல தகவல்கள் இல்லை" என்றும் டு தி டெத் மீடியா வலைதளம் தெரிவித்துள்ளது.

கோட்பாடு :

இதில் பொறிக்கப்பட்டு இருக்கும் க்யூனிபார்ம் எழுத்துக்கள் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான அவ்வகை எழுத்தானது ஆஸ்ட்ரியாவில் முடிவு பெற்று இருக்கலாம் என்ற கோட்பாடும் உருவாகி உள்ளது.

சவால் :

சம்பந்தப்பட்ட இடத்திற்கு சாராத பொருட்கள் ஒரு இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டால் அது தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமின்றி வராலறுக்கே சவாலாக இருக்கும் என்று சதி ஆலோசனை கோட்பாடாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யூஎஃப்ஓ சைட்டிங் டெய்லி :

"கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த பொருளை எதிர்காலத்தை கணிக்கும் ஒரு நாகரீகத்தால் தான் உருவாக்கப்பட்டு இருக்கும்" என்று தன் ஆதரவையும் அளித்துள்ளது, யூஎஃப்ஓ சைட்டிங் டெய்லி (UFO Sighting Daily) வலைதளம்.

வீடியோ :

பராநார்மல் க்ரூஸிபல் என்ற யூட்யூப் சேனல் வெளியிட்ட 800 ஆண்டுகள் பழைமையான மொபைல் போன் போன்று காட்சியளிக்கும் பொருள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
An 800 year old mobile phone was has been found with a cuneiform writing. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்