பார்த்தவுடன் வாங்க தூண்டும், ஆனால் வாங்க முடியாது.!!

Written by: Aruna Saravanan

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. பல்வேறு சிறிய மற்றும் பெரும் நிறுவனங்கள் வித்தியாசமான, மற்றும் பயனுள்ள வகையில் என பல்வேறு விதமான கருவிகளை தயாரித்து வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு புதிய கருவிகள் தினந்தோறும் அறிமுகமாகி வருகின்றது. இங்கு தற்சமயம் வாங்க முடியாத சிறந்த தொழில்நுட்ப கருவிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

MIN7

இது ஒரு மரத்தாலான ஸ்பீக்கர். இதன் உதவியோடு ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை இனிமையாக அனுபவிக்க முடியும். ஒவ்வொரு MIN7உம் 15 எம் எம் தடிமமான மரத்தாலான பேனல்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இயற்கையான குரல் உங்கள் இல்லத்தை நிரப்பும் சக்தி வாய்ந்தது.

Triton Scuba Mask

இதன் உதவி கொண்டு நீருக்கு அடியில் நீச்சல் அடிக்க முடியும். இந்த பிரத்தியேக நீச்சல் உபகரணம் கனம் குறைவாக இருப்பதால் இதை அணிந்து செல்வது மிகவும் சுலபமே. இதை வாயில் பொருத்தி கொண்டாலே போதும் 45 நிமிடங்களுக்கு நீருக்கு அடியில் இருக்க முடியும். இதன் உதவியால் நீருக்கு அடியில் நன்றாக மூச்சு விடவும், நீந்தவும் முடியும்.

Nervana

இசையின் மூலம் உடம்பில் புத்துணர்ச்சி பெறுவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து நரம்புகளுடன் சேர்ந்து செயல்படும். இதன் மூலம் நரம்புகளுக்கு இசையின் அனுபவத்தை இது வரை காணாதபடி கொடுக்க முடியும்.

oombrella

இந்த குடை புதிய ஆற்றல் கொண்டது. இது மழை வருவதை முன்கூட்டியே கூறும் தன்மை வாய்ந்தது. இதை நீங்கள் விட்டு சென்றால் உங்களுக்கு இது தகவலும் அனுப்பும். இதன் நிறத்தையும் அளவையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

Lifepack

இதில் சூரிய ஒளி சக்தியை கொண்ட USB சார்ஜர். ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ், integrated lock மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஸ்டோரேஜ் அமைப்பு கொண்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Amazing Technologies That You Can't Buy Right Now Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்