வியக்க வைக்கும் விண்வெளி தொழில்நுட்பங்கள்..!!

By Meganathan
|

ஒரு விஷயம் பலருக்கும் தெரியனும்னா அந்த விஷயம் முதல்ல எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும். பிடித்திருப்பதோடு ஒரு விஷயம் பிரபலமாக பல காரணங்கள் தேவைப்படுகின்றது.

இங்கு தற்சமயம் வரை கனவாக இருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் விண்வெளி தொழில்நுட்பங்களை குறித்து தான் பார்க்க இருக்கின்றோம். இப்படியும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றதா என்பதை கடைசி ஸ்லைடர்களில் புரிந்து கொள்வீர்கள்..

செயற்கை ஈர்ப்பு

செயற்கை ஈர்ப்பு

விண்வெளியில் வீரர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுத்தும் விஷயம் சீரோ கிராவிட்டி சூழல் தான். வீரர்களை காற்றில் மிதக்க வைக்கும் இந்த சூழலில் விண்வெளி வீரர்களால் அன்றாட பணிகளை செய்வதே சவாலான விஷயமே.

ஈர்ப்பு

ஈர்ப்பு

இந்த பிரச்சனைக்கு விண்வெளி பொறியாளர்கள் தீர்வு கண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளி நிலையத்தை சுழல செய்து வீரர்களை சுவற்றில் நடக்க வைக்க முடியும்.

தாணியங்கி ரோபோட்

தாணியங்கி ரோபோட்

விண்வெளியில் மனிதர்களால் நடமாடுவது அதிக ஆபத்தான விஷயம் என்பதால் தாணியங்கி ரோபோட்களை உருவாக்கியுள்ளனர்.

நாசா

நாசா

நாசாவின் ஆட்டோனோமஸ் எஸ்ட்ராவெஹிகுலர் ரோபோடிக் கேமரா விணகலங்களை சுற்றி வரும் திறன் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியும்.

ஏர்லாக்

ஏர்லாக்

ஒரு வேலை விண்வெளியில் நடக்க வேண்டும் எனில் வீரர்கள் தங்களை ஏர்லாக் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது சற்றே சிரமமான காரியம் ஆகும்.

சூட்போர்ட்

சூட்போர்ட்

இந்த பரிச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கண்டறியப்பட்டது தான் சூட்போர்ட், புகைப்படத்தில் காண்பதை போன்று மிகவும் எளிமையாக அணிந்து கொள்ள முடியும் என்பதோடு இதை தயாரிக்கும் செலவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோவர்

ரோவர்

வேற்று கிரகத்தில் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் ரோவர் எவ்வித தடையுமின்றி பயணம் செய்ய வழி செய்யவே மேக்டிரைவ் திட்டம். இந்த திட்டமானது வேற்று கிரகத்தில் ரோவர் எவ்வித சிரமும் இன்றி பயணிக்க உதவும்.

மேக்டிரைவ்

மேக்டிரைவ்

மேக்டிரைவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ரோவர்கள் காந்த சக்தியின் மூலம் சிரமங்களை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பறிமாற்றம்

தகவல் பறிமாற்றம்

விண்வெளி பயணங்களில் மிகவும் முக்கியமான விஷயமே தகவல் பறிமாற்றம் தான். சாதாரணமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு தகவல் அனுப்ப அதிக மின்சாரம் தேவைப்படும், ஆனால் அந்த மின்சாரத்தை கொண்டு வேறு பணிகளை அங்கு செய்ய முடியும்.

லேசர்

லேசர்

விண்வெளியில் இருந்து பூமிக்க தகவல் அனுப்ப லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சுமார் 100 மடங்கு வேகமாகவும் பறிமாறி கொள்ள முடியும். இந்த திட்டம் 2017 ஆம் ஆண்டு வாக்கில் பயன்படுத்தப்படலாம்.

சாத்தியம்

சாத்தியம்

தற்சமயம் சோதனை மற்றும் ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த திட்டங்கள், பயன்பாட்டிற்கு வரும் போது விண்வெளி பயணம் சற்றே ஆபத்து குறைவானதாக இருப்பதோடு இதற்கான செலவும் குறையும் என எதிர்பார்க்கலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Amazing Space Technologies That Could Soon Be Real. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X