நெட்டில் லீக் ஆன நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் ரகசியமாகக் கசிவது சாதாரண விடயமாகி விட்டது. இம்முறை நோக்கியா போனின் புகைப்படம் கசிந்துள்ளது..

Written By:

நோக்கியா பெயரில் கருவிகளை விற்பனை செய்யும் உரிமத்தை அந்நிறுவனம் கடந்த வாரம் பெற்றிருந்தது. இந்நிலையில் நோக்கியா லோகோ கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

பல்வேறு இணையத்தளங்களில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளியான புகைப்படங்களில் இருந்து புதிய கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்பதை இங்குப் பார்ப்போமா.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெட்டல் பாடி

இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம் பெறும் அம்சமாக மெட்டல் பாடி இருக்கின்றது. பெரும்பாலான கருவிகளைப் போன்றே புதிய நோக்கியா கருவியிலும் மெட்டல் பாடி கொண்டுள்ளது.

டூயல் கேமரா

மெட்டல் பாடி கொண்டிருப்பதோடு புதிய நோக்கியா கருவியில் இரு கேமரா கொண்டிருக்கும் எனத் தெரிகின்றது. புதிய புகைப்படங்களில் இரு கேமரா இருப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஐபோன்

வெளியான புகைப்படங்களில் இருந்து நோக்கியா கருவி பார்க்க ஐபோன் 7 போன்று இருக்கும் என்றே தெரிகின்றது. வடிவமைப்பு அம்சங்கள் ஐபோன்களைத் தழுவி மேற்கொள்ளப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

நோக்கியா D1C

முந்தைய லீக் தகவல்களில் நோக்கியா கருவியானது D1C என அழைக்கப்பட்டது. சில தகவல்களில் நோக்கியா D1C டேப்ளெட் எனத் தெரிவித்தது, எனினும் பின்னர் வெளியான தகவல்கள் இது ஸ்மார்ட்போன் தான் எனத் தெரிவித்தன.

வெளியீடு

முன்பு வெளியான தகவல்களில் இந்த ஆண்டு இறுதியில் நான்கு நோக்கியா கருவிகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின் MWC 2017 விழாவில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் புதிய நோக்கியா கருவிகளின் வெளியீடு குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Alleged Nokia Android Smartphone Leaks Online
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்