ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ரூ.9,900 கோடி அபராதம் செலுத்த வேண்டும்!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகத்தைத் தொடர்ந்து பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுப்புடன் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ஒரு பக்கம் மறுபக்கம் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எனப் போட்டியில் அனல் பறக்கும் நிலையில் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் மற்ற நிறுவனங்களுக்கு நடைபெறும் போட்டியில் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டுடன் இது நிற்காமல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் வரை இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் விதிமுறை மீறிய குற்றச்சாட்டுக் காரணமாக ரூ.9,900 கோடி வரை அபராதம் செலுத்த வேண்டுமென ஓய்வு பெற்ற நீதிபதியான பி.சி படேல் கோரியுள்ளார். இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் ஷர்மா மற்றும் தலைமைக் கணக்காயர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல் சஷி காந்த் ஷர்மாவிற்கு நீதிபதி பி.சி படேல் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆய்வு

'இப்பிரச்சனை குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வைத் தொடர்ந்து , இது வாடிக்கையாளர் மற்றும் போட்டிகளுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை என்பதோடு, இவற்றை டெலிகாம் நிறுவனங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இன்டர் கனெக்டிவிட்டி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கான இன்டர் கனெக்டிவிட்டி பிரச்சனை குறித்து மூன்று டெலிகாம் நிறுவனங்களும் வாடிக்கையாளர் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என நீதிபதி படேல் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

மேலும் இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது பயனர்களை வேறு நிறுவன சேவைகளுக்கு மாற விடாமல் வேண்டுமென்றே தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நடவடிக்கை

மூன்று டெலிகாம் நிறுவனங்களும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சூழ்நிலையில் நேர்மையான குடிமகன் என்ற வகையில் என்னால் மௌனமாக இருக்க முடியாது, இது அவர் பெற்ற உரிம விதிகளை மீறும் செயல் ஆகும். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி படேல் குறிப்பிட்டுள்ளார்.

சேவை

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 22 வட்டாரங்களில் இன்டர்கனெக்ஷன் சார்ந்து சேவைகளை வழங்கி வருகின்றன, சேவைத் தரம், மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவைகள் அனைத்து வட்டாரங்களிலும் இந்நிறுவனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அபராதம்

இந்த மூன்று நிறுவனங்களும் தலா ரூ.3,300 கோடி என மொத்தமாக ரூ.9,900 கோடி வரை அபராத தொகை இருப்பதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Airtel, Vodafone, Idea should pay Rs 9,900 crore for refusing PoIs to Reliance Jio Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்