ஆபர்களின் வேலிடிட்டியை குறைத்த ஏர்டெல், பயனர்கள் அதிர்ச்சி.!

ஜியோ ப்ரைம் அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி செய்த ஒரு காரியத்தை பாருங்கள்.

|

ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சந்தா அறிவிப்பை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக அளவிலான ஆபர்களை வழங்கி ஒரு ஆரோக்கியமான கட்டண திட்டங்கள் சார்ந்த யுத்தத்தை நடத்தும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க ஏர்டெல் அமைதியாக அதன் ஆபரின் வேலிட்டியை குறைத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கடும் விளைவுகளை ஏர்டெல் நிறுவனம் சந்திக்கலாம் என்பதற்கு முதல்படியாய் திகழும் இந்த செயல்பாட்டில் ஏர்டெல் செய்தது என்ன.? காரணம் என்ன.?

16 நாட்கள் மட்டுமே

16 நாட்கள் மட்டுமே

ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் 600எம்பி அளவிலான 3ஜி/4ஜி /தரவு வழங்கும், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.149/- ரீசார்ஜ் ஆனது இப்போது வெறும் 16 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் வண்ணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆர்சி149

ஆர்சி149

எனினும், இந்த திருத்தப்பட்ட திட்டம் இப்போது பயனர்கள் முன்பு பெற்ற அதே நன்மைகள் வழங்கினாலும் அதன் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்சி149 இனி 16 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

வேலிடிட்டி குறைப்பு

வேலிடிட்டி குறைப்பு

இந்த வேலிடிட்டி குறைப்பானது ஜியோ ப்ரைம் உறுப்பினர் வாய்ப்பை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் நிகழ்த்தியுள்ளது. முகேஷ் அம்பானியின் அறிவிப்பின்படி ஜியோ தொலைதொடர்பு தற்போது 100 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் அதாவது அது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வெறும் 170 நாட்களில் இந்த சாதனையை ஜியோ அடைந்துள்ளது.

4ஜி தரவு

4ஜி தரவு

புதிய ப்ரைம் திட்டத்தின் கீழ் நீங்கள் தற்போது அனுபவிக்கும் ஹேப்பி நியூ இயர் ஆஃபரின் அனைத்து நன்மைகளையும் பெறலாம். அதாவது ஒவ்வொரு நாளும் 1ஜிபி அளவிலான 4ஜி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவைகளை ரூ.303/- என்ற மாதாந்திர கட்டண சேவையின் கீழ் பெறலாம் உடன் ரூ.99/- என்ற ஆண்டுக்கு ஒரு முறை சந்தா கட்டணமும் செலுத்த வேண்டும்.

ரூ.10/- மட்டுமே

ரூ.10/- மட்டுமே

முதல் பார்வையில் ஜியோவின் சந்தா கட்டணம் சற்று அதிகமாக தெரிந்தாலும் கவனமாக அனுசரித்தால் நாள் ஒன்றிற்கு நீங்கள் ரூ.10/- மட்டுமே செலுத்தி 4ஜி சேவை உடன் இன்னபிற ஜியோ தொலைதொடர்பு இலவச அணுகல்களை பெறுகிறீர்கள் என்பதை உணர்வீர்கள். இப்போது, நீங்கள் ஏர்டெல் வழங்கும் ரூ.149/- திட்டத்தை ஜியோ ப்ரைம் சேவையுடன் ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு எந்த அளவிலான லாபம் என்பதை நீங்களே உணர்வீரகள்.

முதலிடத்தில்

முதலிடத்தில்

இதற்கிடையில் செப்டம்பர் முதல், மூன்றாவது முறையாக பார்தி ஏர்டெல் ட்ராயின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உடன் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனம் ஜனவரி 2017-க்கான பதிவில் சராசரியாக 8.43எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜனவரி 2017 நெட்ஃபிக்ஸ் ஐஎஸ்பி வேக குறியீட்டிலும் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளது.

காலம் தான் பதில்

காலம் தான் பதில்

இப்போது கேள்வி என்னவென்றால், ரிலையன்ஸ் ஜியோவுடன் ஆன போட்டியில் ஏர்டெல் நிலைத்து நிற்குமா.? குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபடும் ஜியோ சேவைக்கு எதிராய் இதுபோன்ற வேலிடிட்டி குறைப்புகள் நிகழ்த்துவதில் ஏர்டெல் ஈடுபட்டால் தொடர்ந்து முதல் இடம் வகிக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ ப்ரைம் சேவைக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்னவாகும்.?

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel silently decreases RC149 data pack validity to 16 days from 28 days following Jio’s announcement. Read more about this in Tamil Gi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X