ஜியோவை எதிர்கொள்ள ஏர்டெல் தடாலடி முடிவு!

ஜியோ சேவைகளை எதிர்கொள்ளப் பல நாள் முயற்சி செய்து ஒரு வழியாகத் தடாலடி அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ பயனர் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேலையில் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வது மற்றும் புதிய பயனர்களைச் சேர்க்கவும் விதவிதமானச் சலுகைகளை ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் அறிவித்து வருகின்றன.

டேட்டா கட்டணங்களில் இருந்து ரோமிங் கட்டணம் வரை எல்லாவற்றிற்கும் புதிய சலுகைகள் வழங்கி வரும் ஏர்டெல் தனது டேட்டா வருவாயினை அதிகரிக்கத் தடுமாறி வருகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முறையீடு

தேவையான இண்டர்கனெக்ஷன் பாயிண்ட்களை வழங்காதது குறித்த குழப்பத்திற்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விரிவான விளக்கம் அளிக்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

போட்டி

'முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் சேவைகளுடன் போட்டியிடுவது மிகவும் கடினமான ஒன்று, டிசம்பர் மாத வாக்கில் ஜியோவின் கட்டண சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கின்றோம், விரைவில் அதிரடி 4ஜி திட்டங்களை அறிவிப்போம்' என்றும் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைவு

ஜியோவின் இலவச சேவைகள் ஏர்டெல் டேட்டா வருவாயினைக் குறைத்திருக்கின்றது, மேலும் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை டிசம்பர் மாத இறுதியில் சுமார் 40 மில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்கது.

சரிவு

செப்டம்பர் மாத காலாண்டு வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தின் ஆண்டு டேட்டா வருமானம் சுமார் 24 சதவீதமாக இருக்கின்றது. மொத்தமாகப் பார்க்கும் போது ஏர்டெல் நிறுவனம் லாபத்தில் இருந்து சுமார் 5 சதவீதம் வரை சரிவை சந்தித்திருக்கின்றது.

குழப்பம்

'டிராய் தகவல்களின் படி இண்டர்கனெகஷன் வழங்கப்பட்டது குறித்த குழப்பம் இருக்க வேண்டும். மற்ற நிறுவனங்களுக்கு வழங்குவதை விடச் சுமார் 2.5 மடங்கு அதிகளவு இண்டர்கனெக்ட் பாயிண்ட்களை ஜியோ நிறுவனத்திற்கு ஏர்டெல் வழங்கியிருப்பதாக' விட்டல் தெரிவித்துள்ளார்.

தீர்வு

இண்டர்கனெக்ஷன் சார்ந்த குழப்பங்களைத் தீர்க்க ஏர்டெல் தயாராக இருக்கின்றது. மேலும் விரிவான விளக்கங்ளைத் தொடர்ந்து டிராய் தனது முடிவினை மாற்றிக் கொள்ளும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Airtel readying aggressive 4G offers to take on reliance jio
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்