டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இலவச டால்க் டைம், மற்றும் பல.!

ஏர்டெல் பேங்க் அல்லது ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் என்று அழைக்கப்படும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பகுதி, அதன் பைலட் பேங்க் சேவைகளை அறிவித்துள்ளது.

Written By:

ரிலையன்ஸ் ஜியோவை பார்த்து "தம்பி.. கொஞ்சம் ஓரமா போங்க தம்பி" என்று நக்கலாய் சொல்லும்படியான ஒரு அட்டகாசமான அதிரடியை ஏர்டெல் நிகழ்த்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஏர்டெல் பேங்க் என்று அழைக்கப்படும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000/- நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது, சுருக்கமாக சொன்னால் பேடிஎம் போன்ற ஒரு பண பரிவர்த்தனை சேவையை வழங்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பேடிஎம் சேவையை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தில் ஏர்டெல் பேங்க் அல்லது ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது அதன் அதிரடியான பைலட் பேங்க் சேவைகளை அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரூபாய்க்கு நிகரான நிமிடங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஏர்டெல் பேங்க் அல்லது ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு திறக்கும் ஏர்டெல் சந்தாதாரருக்கு அவர் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கு நிகரான நிமிடங்களுக்கு டாக்டைம் வழங்கப்படும்.

ரூ.500/- டெபாசிட் செய்தால்

அதாவது நீங்கள் ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியில் உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் உங்கள் ஏர்டெல் தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டால்க்டைம் கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முதல் முறையாக வைப்பு

உங்களுக்கு கிடைக்கும் நிமிடங்களை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும் அழைத்து பயன்படுத்த முடியும். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல் முறையாக வைப்பு (டெபாசிட்) வைப்பவர்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும்

ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஆனது இந்தியா முழுவதும் வெளியிடும் நோக்கத்துடன் ராஜஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ஒரு திட்டமாகும். இந்தியா முழுவதும் அறிமுகமாகும் பொருட்டு ஏர்டெல் வங்கி அதன் பைலட் வங்கி சேவைகளை அறிவித்துள்ளது.

அடிப்படை மற்றும் வசதி

ராஜஸ்தானின் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள எந்தவொரு ஏர்டெல் பயனருமே எந்தவொரு ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையங்களிலும் அவர்களின் வங்கி கணக்குகளை திறக்க முடியும் வண்ணம் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவொரு அடிப்படை மற்றும் வசதியான வங்கி சேவையாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அணுகல்

ஏர்டெல் வங்கிகள் மூலம் டிஜிட்டல் பண சுற்றுச்சூழல் அதிகரிக்கும் மற்றும் பண சார்ந்திருக்கும் நிலையின் அளவு குறையும் என்று நம்பப்படுகிறது. ஏர்டெல் வங்கியின் சேவைகளை ஏர்டெல் எண்கள் கொண்டு அடையலாம், அதாவது ஏர்டெல் மணி ஆப், அலல்து *400# என்ற யுஎஸ்எஸ்டி எண்ணிற்கு டயல் செய்வதின் மூலமாகவும் அடையலாம் அல்லது 400 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலமாக கூட ஒரு எளிய வழியில் அணுகலாம்.

மேலும் படிக்க

7.25% வட்டி கொடுக்கும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Airtel Payments Bank gives you talktime for every rupee in savings deposits. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்