நவராத்திரி சலுகை : புதிய டேட்டா திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!

Written By:

தொழில்நுட்ப சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு இன்னும் ஓயவில்லை என்றே கூறலாம். பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவிப்பது தொடர் கதையாகிவிட்டது. மேலும் பண்டிகை காலம் துவங்கியிருக்கும் நிலையில் அனைத்து நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

நவராத்திரி சலுகை : புதிய டேட்டா திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!

ஜியோ சிம் வாங்க வேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் காணப்படுகின்றது. இந்நிலையில் ஏர்டெல் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் நிறுவனம் ரூ.1,495க்கு அன்லிமிட்டெட் 4ஜி டேட்டாவினை அறிவித்தது. இதைத் தொடர்ந்து வோடபோன் தன் பங்கிற்கு 1ஜிபி கட்டணத்தில் 10 ஜிபி டேட்டா வழங்கியது. பின் ஐடியாவும் ரூ.1க்கு 4ஜி வழங்கியது.

தற்சமயம் வோடபோன் போன்றே ஏர்டெல் நிறுவனமும் 10 ஜிபி 4ஜிபி டேட்டாவினை ரூ.1ஜிபி கட்டணத்திற்கு வழங்குகின்றது. இந்தச் சலுகையைப் பெற பயனர்கள் ரூ.249க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பின் "4G Offer" என டைப் செய்து 52141 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.ய இவ்வாறு செய்யும் போது 9 ஜிபி டேட்டா உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Airtel Offers New 4G Plan Which Is 50% Cheaper Than Jio
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்