ரெட்மி நோட் 4ஜி வாங்குபவர்களுக்கு 3ஜி விலையில் 4ஜி டேட்டா இருமடங்கு கிடைக்கும்

Written By:

ரெட்மி நோட் 4ஜி விற்பனை துவங்கிய சில நொடிகளிலேயே அனைத்தும் விற்று தீர்ந்து விடுகின்றன. இந்த முறை சியோமி நிறுவனம் தனது பேப்ளெட்டை ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்ய இருக்கின்றது. இதை மேற்கொள்ள ஏர்டெல் நிறுவனம் முன்வந்திருக்கின்றது. மேலும் ஏர்டெல் நிறுவனமும் விற்பனையை துவங்கி விட்டது இதில் முக்கியமான காரியம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு டேட்டா சலுகைகளை அரிவித்திருக்கின்றது ஏர்டெல்.

ஏர்டெல் மூலம் சியோமி ரெட்மி 4ஜி வாங்குபவர்களுக்கு 4ஜி சிம் மற்றும் 3ஜி விலையில் 4ஜி சேவைக்கான டேட்டா வழங்கப்படும். மேலும் முதல் ஆறு மாதங்களுக்கு இரு மடங்கு 4ஜி டேட்டா வழங்கப்படும். இதன் படி ஏர்டெல் நிறுவனத்தின் 1ஜிபி 3ஜி டேட்டா விலை ரூ.250, ஆனால் ரெட்மி நோட் 4ஜி வாங்கும் போது 4ஜி சம் கார்டு மற்றும் ரூ.250க்கு 2ஜிபி 4ஜி டேட்டா பெற முடியும். இந்த சேவை 6 மாத வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 4ஜி வாங்குபவர்களுக்கு 3ஜி விலையில் 4ஜி டேட்டா

ஏர்டெல் 4ஜி சேவை இல்லாத இடங்களில் வாடிக்கையாளர்கள் நேரடியாக 3ஜி சேவைக்கு மாற்றப்பட்டு 3ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

ரெட்மி நோட் 4ஜி இந்தியாவில் ரூ.9,999க்கு கிடைக்கின்றது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 8 ஜிபி இன்டெர்னல் மெமரியோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

English summary
Airtel offers double 4G data on Xiaomi Redmi Note 4G. The Redmi Note 4G is selling the device via the offline route, Airtel’s stores in this case. The operator has already started selling the smartphone, and to further tempt buyers it is also offering double the amount of data.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்