ஐபோன் 7 வாங்கினால் இலவச டேட்டா ஏர்டெல் அறிவிப்பு!

Written By:

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் விற்பனை இந்தியாவில் துவங்கி விட்டது. இந்நிலையில் பல்வேறு இணைய வர்த்தகர்களும் பயனர்களுக்கு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளனர். இணைய வர்த்தகர்களுடன் இணைந்து ஏர்டெல் நிறுவனமும் சலுகைகளை அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இன்ஃபினிட்டி

சலுகையின் படி இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் திட்டம் கொண்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வாங்கும் பயனர்கள் மாதம் ஒன்றிற்கு 10 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டாவினை சுமார் 12 மாதங்களுக்குப் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டம்

ஏர்டெல் இன்ஃபினிட்டி திட்டம் ரூ.949/- முதல் துவங்கி ரூ.2,999 வரை இருக்கின்றது. இவற்றின் டேட்டா அளவு 1 ஜிபி முதல் 20 ஜிபி வரை வழங்கப்படுகின்றது. பயனர்கள் தேர்வு செய்யும் திட்டங்களுக்கு ஏற்ப 10ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு

இந்திய ஐபோன் பயனர்கள் புதிய ஏர்டெல் திட்டங்களின் மூலம் சிறப்பான இண்டர்நெட் வேகத்தினை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனத்தின் அஜய் பூரி தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 7

ஆப்பிளின் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவி சில்வர், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் 32, 128 மற்றும் 256 ஜிபி வகைகளில் கிடைக்கின்றது. ஜெட் பிளாக் நிற ஐபோன் 128 ஜிபி மட்டுமே கிடைக்கின்றது.

விலை

32, 128, 256 ஜிபி ஐபோன் 7 விலை முறையே ரூ.60,000, ரூ.70,000 மற்றும் ரூ.80,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரிய ஐபோன் 7 பிளஸ் கருவியின் விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Airtel to offer 10GB free 3G/4G data with the Apple iPhone 7 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்