ஏர்டெல் அதிரடி : 3 மாத இலவச சேவை வழங்கும் செட்-டாப் பாக்ஸ்.!

அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள ஏர்டெல் டிடிச் சேவை சிறந்ததா.?? அல்லது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோ டிடிச் சேவை சிறந்ததா.? ஒரு மாபெரும் பலப்பரீட்சை.!

|

ஏர்டெல் இப்போது இந்தியாவில் அதன் புதிய இணைய டிவி சேவையை அதிரடியாக தொடங்கி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பல வகையான இழப்புகளை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் முடிந்த அளவிலான கட்டண யுத்தங்கள், புதிய சலுகைகள் மற்றும் விலைக்குறைப்புகளை நிகழ்த்திய பின்னர் ஒரு கட்டத்தில் எதுவும் அறிமுகம் செய்யாது, நடப்பதை வேடிக்கை பார்ப்பது போல அமைதியை காத்துவந்த நிலையில் இப்போது ஏர்டெல் அதன் வழக்கமான அதிரடி பாணியை வேறு வழியில் நிகழ்த்தியுள்ளது.

அதாவது, வருடத்திற்கு ரூ.4,999/- ஏர்டெல் இண்டர்நெட் டிவி செட்-டாப் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுகம் விரைவில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோ செட் ஆப் பாக்ஸ் சேவைக்கு எதிராக ஏர்டெல் நிகழ்த்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதில் சந்தகேமே வேண்டாம்.!

ஆன்லைன் உள்ளடக்கம்

ஆன்லைன் உள்ளடக்கம்

ஏர்டெல் இப்போது இந்தியாவில் அதன் புதிய இணைய டிவி சேவை தொடங்கியுள்ளது இதன் மூலம் மிக எளிதாக உங்கள் டிவியில் ஆன்லைன் உள்ளடக்கத்தை நீங்கள் அணுகலாம்.

500 செயற்கைக்கோள் டிவி சேனல்

500 செயற்கைக்கோள் டிவி சேனல்

இந்த சேவையின் கீழ் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் 4கே உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு டிவி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆன்லைன் நெட்ஃபிக்ஸ், யூட்யூப், ஏர்டெல் திரைப்படங்கள் மற்றும் மேலும் பலரிடமிருந்து உள்ளடக்கத்துடன், கூடவே 500 செயற்கைக்கோள் டிவி சேனல்களையும் வழங்குகிறது.

ஹைபிரிட் டிடிஎச்

ஹைபிரிட் டிடிஎச்

ஒரு ஹைபிரிட் டிடிஎச் செட் டாப் பாக்ஸ் சேவையான இது பயனர்களுக்கு கூகுள் பிளே ம்யூசிக் அணுகல்,மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து கேம்ஸ்கள், அத்துடன் பிளே பயன்பாடுகள் ஆகிய அணுகல்களையும் ஆதரிக்கிறது. இதுதான் 4கே க்ரோம்கேஸ்ட் செயல்பாடு கட்டமைக்கப்பட்டு இந்தியாவிற்கு வரும் 4கே ஆதரவு கொண்ட ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதம்

மூன்று மாதம்

ஒரு மூன்று மாதம் டிஜிட்டல் டிவி சந்தா சேர்த்து இந்த ஏர்டெல் இன்டர்நெட் டிவியானது ரூ.4,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் பீரியட் ஆபர் முடிந்த பின்னர் அனைத்து வாடிக்கையாளர்களும் ரூ.7,999/- செலுத்தி வருடம் முழுக்க இந்த சேவையை அணுக முடியும்.

பிரத்தியேகமாக கிடைக்கும்

பிரத்தியேகமாக கிடைக்கும்

ஏற்கனவே இருக்கும் ஏர்டெல் டிடிஎச் பயனர்கள் ரூ.3,999/- செலுத்தி ஒரு மாத காலம் இந்த சேவைகளை பெற முடியும் மற்றும் இந்த ஏர்டெல் இன்டர்நெட் டிவி ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி (நேற்று முதல்) அமேசானில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

விருப்பங்களுடன்

விருப்பங்களுடன்

ஒரு டாப் பாக்ஸ் ஆக இருப்பினும் இது தன்னுள் பல தொகுப்புகளை கொண்டுள்ளது அதாவது இந்த சாதனம் பல இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது. இது உள்ளடக்கிய வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் அத்துடன் ஒரு நிலையான ஏ.வி. கேபிள் போர்ட் ஒன்றும் அடங்கும்.

2டிபி ஹார்ட் ட்ரைவ்

2டிபி ஹார்ட் ட்ரைவ்

மேலும் 8ஜிபி சேமிப்புத்திறன் மற்றும் 2ஜிபி ரேம் கொண்ட 128ஜிபி அளவிலாக எஸ்டி அட்டை மூலம் நீட்டிக்ககூடிய ஆதரவு அல்லது ஒரு 2டிபி ஹார்ட் ட்ரைவ் ஆதரவுடன் கட்டப்பட்ட ஒரு சேமிப்பு சாதனமாக இது திகழ்கிறது.

ஜி ஹாட் ஸ்பாட்

ஜி ஹாட் ஸ்பாட்

மேலும் இந்த ஏர்டெல் செட்-டாப் பாக்ஸ் ஆனந்திற்கு ஒரு பிராட்பேண்ட் அல்லது ஒரு மென்மையான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் (குறைந்தது 4எம்பிபிஎஸ்) வேகத்தில் ஒரு 4ஜி ஹாட் ஸ்பாட்டை தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் நிறுவலில் ஒரு நிலையான ஏர்டெல் டிஜிட்டல் டிவி டிஷ் ஆண்டெனாவும் ஒரு பகுதியாக இருக்கும்.

ஏர்டெல் vs ஜியோ

ஏர்டெல் vs ஜியோ

ஏர்டெல் ஒருபக்கம் சலுகைகளை அள்ளி வழங்க விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோ டிடிச் ஆனது 3 முதல் 6 மாதங்களுக்கு இலவச சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள சில பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கையிலான சேவைகளை ஜியோ டிடிஎச் வழங்கி வருகிறது என்று முன்பு வெளியான தகவல்கள் கூற வேறெந்த நகரத்திலும் இந்த சேவை தொடங்கப்படவில்லை ஆனால் வரும் மாதங்களில் ஒரு சாத்தியமான வெளியீடு நிகழும் என்று வெளியான தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. ஜியோ டிஜிட்டல் லைஃப் என்ற லோகோ கொண்ட ஒரு எளிய ப்ளூ பெட்டி வடிவத்தில் இருக்கும் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது முன்பக்கம் சுத்தமாகவும் மற்றும் இடது மூலையில் போர்ட்கள் அமைந்துள்ளதையும் காட்சிப்படுத்துகிறது.

ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட்

ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட்

லீக்ஸ்ட்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த புகைப்படத்தில் இருந்து அதன் பின்பகுதியில் ஆடியோ கேபிள் போர்ட்கள் மற்றும் மெயின் கேபிள் கம்பி ஆகியவைகள் இருப்பதும், யூஎஸ்பி மற்றும் ஒரு ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட் இணைந்த எச்எம்டிஐ (HDMI) போர்ட் கொண்டுள்ளதையும் காட்டுகிறது. குறிப்பாக ஆர்.ஜே-45போர்ட் ஆனது மோடம் உடன் இணைக்கப்படும் வண்ணம் அமைந்தால் ஜியோ சேவை ஒரு அதிவேக பிராட்பேண்ட் வழங்கும் என்பது உறுதி.

இலவச சேவை

இலவச சேவை

அதுமட்டுமின்றி சேவை நிறுவல்களுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கலாம் மற்றும் செட்-டாப் பாக்ஸ்-ற்கு மட்டும் குறைந்தபட்ச கட்டணம் இருக்கக் கூடும் என்றும் வெளியான தகவலில் அறியப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் எந்த விதமான ஜியோ டிடிச் திட்டங்கள் சார்ந்த விவரங்களும் வெளியாகவில்லை என்றாலும் கூட முன்பு வெளியான தகவலின் கீழ் ஜியோ டிடிஎச் சேவையானது தோராயமாக மாதம் ரூ.185/- என்பதை விட குறைவாகத் தான் இருக்கும்.

ரூ.275/-ல் முதல் ரூ.300/-

ரூ.275/-ல் முதல் ரூ.300/-

குறிப்பாக, மற்ற டிடிஎச் சேவைகள் ரூ.275/-ல் முதல் ரூ.300/- வரையிலாக திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் போது ரூ.185/- என்பது மிகவும் குறைவான விலையாகும். இருப்பினும் சரியான விலையயை ஜியோதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற அனைத்து டிடிஎச் சேவைகளிலும் பதிவு செய்யும் அம்சம் உண்டு. ஆனால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான பதிவை நிகழ்த்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஜியோ சேவையில் அப்படி இருக்காது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒரு வார காலம் வரை பதிவு செய்யும் திறனை ஜியோ டிடிஎச் சேவை வழங்கும் என்றும் முன்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுதி

உறுதி

ஜியோ டிடிச் சேவை எப்போது வெளியாகும் என்பதில் மட்டும் தான் சந்தேகம் உள்ளதே தவிர டிஜிட்டல் டிவி துறையை தற்போதைக்கு ஆளும் டாடா ஸ்கை மற்றும் டிஷ் டிவி போன்ற முன்னணி நிறுவனங்களை ஜியோவின் மிக மலிவான கடனஸ் சேவை பின்னுக்குதள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதாவது ஜியோ டாப் பாக்ஸ் சேவை தொடங்கினால் உறுதியாகக் டிடிச் கட்டண சேவைகளின் விலை 50% குறையும். ஆக அடுத்த விலைக்குறைப்பு போட்டிக்கு ரெடியாக இருங்க.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

புதிய குழப்பம் : உங்கள் ஜியோ சிம் போஸ்ட்பெயிட் சிம் ஆக மாறுமா.?

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel launches Android TV powered Internet TV set top box. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X